13 குழந்தைகளை அடைத்து கொடுமை செய்த பெற்றோர் | அமெரிக்கா


அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் தங்களது 13 குழந்தைகளை ஒரே வீட்டில் வைத்து கொடுமை செய்த பெற்றோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பெரீஸ் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்த வீட்டிலிருந்து தப்பித்த 17 வயதான பெண் ஒருவர், தனக்கு கிடைத்த மொபைல் போன் மூலம் போலீசாருக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து அங்கு சென்ற போலீசார் 2 வயது முதல் 29 வயது வரையில் பதிமூன்று பேர் அடைத்து வைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

டேவிட் ஆலன் டர்பின் (57) மற்றும் அவரது மனைவி லூயிஸ் அன்னா டர்பின் (49) ஆகியோர் இந்த செயலில் ஈடுபட்டு வந்துள்ளனர். 2011 முதல் 2016 வரை  பேஸ்புக் பக்கங்களில் இவர்கள் தங்களது குழந்தைகள் உள்ளிட்ட குடும்பத்தினருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும், விழாக் கொண்டாட்டங்களையும் பதிவிட்டுள்ளனர். இவர்கள் வீட்டில் 3 கார் மற்றும் ஒரு வேன் காணப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தினரும் அறியாதவண்ணம் செயல்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *