மலேசியாவில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சகோதரரை தடை செய்யப்பட்ட ரசாயனம் பயன்படுத்தி படுகொலை


வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்-னின் ஒன்றுவிட்ட சகோதரரான (தந்தையின் சகோதரர் மகன்) கிம் ஜாங் நாம் மலேசிய விமான நிலையத்தில் கடந்த 6-2-2017 அன்று அடையாளம் தெரியாத நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை தொடர்பாக இரு பெண்கள் மற்றும் வட கொரியாவை சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் கூலிப்படை மூலம் கிம் ஜாங் நாம்-ஐ தீர்த்து கட்ட வட கொரியாவை சேர்ந்த சதி திட்டம் தீட்டியது தெரிய வந்தது.

அவரை கொல்வதற்காக உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட ‘VX’ எனப்படும் கொடிய நச்சு ரசாயனம் பயன்படுத்தப்பட்டது பிரேத பரிசோதனையின் மூலம் கண்டு பிடிக்கப்பட்டது. இந்நிலையில், பயங்கரமான ரசாயனத்தை இந்த படுகொலைக்கு பயன்படுத்தி இருப்பதை மலேசிய அரசு கண்டித்துள்ளது.

இதுதொடர்பாக, மலேசிய அரசு வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், ‘எவ்விதமான நோக்கத்திலும், எந்த சூழ்நிலையிலும் மக்கள் அதிகமாக நடமாடும் பொது இடங்களில் இதைப்போன்ற அபாயகரமான நச்சு ரசாயனத்தை பயன்படுத்தப்படுவதை இந்த அரசு வன்மையாக கண்டிக்கிறது.

இதைப்போன்ற ஆபத்தான ரசாயனங்களை மலேசியா தயாரிப்பது கிடையாது. இறக்குமதி செய்து நாங்கள் சேமித்து வைப்பதும் இல்லை. நெதர்லாந்தில் இருக்கும் ரசாயன ஆயுதங்கள் மீதான தடையை கண்காணித்து வரும் அமைப்பிடம் இது, தொடர்பாக ஆண்டுதோறும் முறையான அறிக்கையை மலேசிய அரசு தாக்கல் செய்து வருகிறது’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கிம் ஜாங் நாம் படுகொலை தொடர்பாக வட கொரியா நாட்டை சேர்ந்த ரி ஜாங் சோல் என்பரை போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி வந்தனர். விசாரணை முடிந்து அவர் விடுவிக்கப்பட்டதாகவும், மலேசியாவை விட்டு அவர் உடனடியாக நாடு கடத்தப்படுவார் என்றும் தெரியவந்துள்ளது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *