13 ஆண்டுகளுக்கு பின் உலக வர்த்தக மையம் மீண்டும் திறப்பு


அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல் நடந்து 13 ஆண்டுகளுக்கு பின்னர் உலக வர்த்தக மைய கட்டடம் மீண்டும் வர்த்தக பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள புகழ்பெயற்ற இரட்டை கோபுரம் கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி அல்கொய்தா பயங்கரவாதிகளால் விமானம் மூலம் தகர்க்கப்பட்டது. இதில் 2700 பேர் பலியாயினர்.
உலகையே அச்சறுத்திய இந்த தாக்குதல் சம்பவத்தையடுத்து அருகில் உள்ள உலகவர்த்தக மைய கட்டடமும் சேதமடைந்ததால், தாற்கலிகமாக நியூஜெர்ஸி, மற்றும் மன்ஹாட்டன் ஆகிய நகரங்களில் உலக வர்த்தக மைய நிர்வாகம் செயல்பட்டுவந்தது.
சேதமடைந்த கட்டடங்கள் இரவு பகலாக புதுப்பிக்கும் பணிகள் தகுந்த பாதுகாப்பு தொழில்நுட்பத்துடன் நடந்து வந்த நிலையில் நேற்று வர்த்தக பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.
104 மாடிகளைகொண்ட இந்த வர்த்தக மையத்தில் தற்போது 80 ஆயிரம் சதுரடியில் 5 மாடிகளில் 170 நிறுவனங்கள் துவங்கப்பட்டு 3,400 ஊழியர்கள் பணிக்கு வந்துள்ளனர். 2015-ம் ஆண்டிற்கு அனைத்து மாடிகளிலும் வர்த்தக பயன்பாட்டிற்கு உபயோக்பபடுத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *