சீன எல்லையை யாராவது பிரிக்க நினைத்தால் அத்துமீறி நுழைந்தால் ராணுவம் சரியான பதிலடி கொடுக்கும் | சீன அதிபர் ஜி ஜின்பிங்


”மற்றவர்களின் நிலத்தை ஆக்கிரமிக்கும் அல்லது சீன எல்லையை விரிவுபடுத்தும் எண்ணம் இல்லை; அதே நேரத்தில், சீன எல்லையை யாராவது பிரிக்க நினைத்தால், அத்துமீறி நுழைந்தால், ராணுவம் சரியான பதிலடி கொடுக்கும்,” என, சீன அதிபர், ஜி ஜின்பிங் கூறினார்.

சீன ராணுவத்தின், 90வது நிறுவன நாள்விழாவின் நிறைவு நிகழ்ச்சி நேற்று நடந்தது. அப்போது, சீன அதிபர், ஜிஜின்பிங் பேசியதாவது: நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு, மேம்பாட்டுக்கு எதிரான எந்த நடவடிக்கையையும் ஏற்க முடியாது. அமைதி மற்றும் எல்லையை பாதுகாக்கவும், போர் ஏற்படாமல் தடுக்கவும் பல வழிகள் உள்ளன. சீனா அமைதியையே விரும்புகிறது.
போர், கடைசி வாய்ப்பாகவே இருக்க வேண்டும்; அதே நேரத்தில், எந்த நேரத்தில் போர் வந்தாலும், எதிரிகளால் தொந்தரவு ஏற்பட்டாலும், உடனடியாக செயல்படக் கூடிய அளவுக்கு ராணுவம் தயாராக இருக்க வேண்டும். மற்ற நாடுகளின் நிலத்தை ஆக்கிரமிக்க வேண்டும் என, சீனா விரும்பவில்லை; நாட்டின் எல்லையை விரிவுபடுத்தும் முயற்சியிலும் ஈடுபடவில்லை. அதே நேரத்தில், சீனாவின் எல்லையை, யாராவது ஆக்கிரமிக்க நினைத்தால், அதை ஏற்க முடியாது. இவ்வாறு அவர் பேசினார். இந்தியா – சீனா இடையே எல்லைப் பிரச்னை தீவிரமடைந்து வரும் நிலையில், மூன்று நாட்களில், இரண்டாவது முறையாக, இது தொடர்பாக, சீன அதிபர், ஜி ஜின்பிங் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − eight =