அல்-காய்தாவின் முக்கியத் தலைவர் கொல்லப்பட்டதாக தகவல் | அமெரிக்க வான்வழி தாக்குதல்


யேமனில் அமெரிக்கா நிகழ்த்திய வான்வழித் தாக்குதலில் அல்-காய்தாவின் முக்கியத் தலைவர் அலி அல்-அன்ஸி கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சர்வதேச அளவில் பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளைக் கண்காணித்து வரும் “சைட்’ அமைப்பு இந்தத் தகவலை வியாழக்கிழமை வெளியிட்டது. கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்கா நிகழ்த்திய ஆளில்லா விமானத் தாக்குதலில், அல்-அன்ஸி மட்டுமின்றி அவரது மகனும், வேறு சில பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டதாக அந்த அமைப்பு தெரிவித்தது.
பிரான்ஸில் “சார்லி ஹெப்டோ’ பத்திரிகை அலுவலகம் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல், லூக் சோமர்ஸ் என்ற அமெரிக்கரின் படுகொலை ஆகிவற்றுக்கு அலி அல்-அன்ஸி பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *