குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஹிலாரி கிளிண்டனை கைது செய்து விசாரணை நடத்த வாய்ப்புள்ளதாக பரபரப்பான தகவல்கள்


அமெரிக்க தேர்ந்து எடுக்கபட்டு உள்ள டொனால்டு டிரம்ப் பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஹிலாரி கிளிண்டனை கைது செய்து விசாரணை நடத்த வாய்ப்புள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவு துறை அமைச்சராக ஹிலாரி கிளிண்டன் பதவி வகித்தபோது ராணுவ தகவல்களை தனது சொந்த மின்னஞ்சல் மூலம் பகிர்ந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

மேலும், தேர்தல் பிரச்சாரத்தின்போது அவரது கிளிண்டன் அறக்கட்டளை மூலம் முறைகேடாக நிதிகளை பெற்றது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானார்.

எனினும், ஹிலாரி கிளிண்டன் குற்றமற்றவர் என்றும் அவர் மீது விசாரணை நடத்த முடியாது என அந்நாட்டு புலனாய்வு துறை இயக்குனரான ஜேம்ஸ் கேமி அறிவித்தார்.

இந்த அறிவிப்பால் அதிர்ச்சி அடைந்த டொனால்டு டிரம்ப் ‘ஹிலாரி பயன்படுத்திய 6,50,000 மின்னஞ்சல்களை வெறும் 8 நாட்களில் ஆய்வு செய்ய முடியாத நிலையில், அவரை எப்படி குற்றமற்றவர் என அறிவிக்க முடியும்?

ஹிலாரி கிளிண்டன் அரசு அதிகாரிகளால் மிக கவனமாக காப்பாற்றப்படுகிறார்.

இந்த தேர்தலில் நான் வெற்றி பெற்றால் இவ்விவகாரத்தை மீண்டும் கையில் எடுத்து தனி வழக்கறிஞரை நியமித்து விசாரணை செய்வேன். ஹிலாரி மீதுள்ள குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவரை சிறையில் அடைப்பேன்’ என அதிரடியாக கூறியுள்ளார்.

இந்நிலையில், நேற்று நடந்த முடிந்த தேர்தலில் டொனால்ட் டிரம்ப் அபாரமாக வெற்றி பெற்றுள்ளார். மேலும், அவர் ஏற்கனவே கூறியதுபோல ஹிலாரி கிளிண்டனை விசாரணை செய்ய தனி வழக்கறிஞர் நியமிக்கப்படவுள்ளதாகவும் நேற்றே தகவல்கள் வெளியாகின.

இதுபோன்ற ஒரு சூழலில் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளரான ஜோஸ் எர்னஸ்ட் என்பவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அப்போது, ‘பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள ஹிலாரி கிளிண்டனுக்கு தற்போதையை அதிபர் ஒபாமா பொதுமன்னிப்பு வழங்குவாரா?’ எனக் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு அவர் பதிலளித்தபோது, ‘தற்போது மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சில கைதிகளுக்கு அதிபர் ஒபாமா பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார்.

ஆனால், குறிப்பிட்ட நபர்களுக்கு(ஹிலாரி உள்பட) பொதுமன்னிப்பு வழங்குவது தொடர்பாக அதிபருடன் எந்த ஆலோசனையும் மேற்கொள்ளவில்லை’ எனத் தெரிவித்துள்ளார்.

ஒருவேளை ஹிலாரிக்கு ஒபாமா தனது அதிகாரத்தை பயன்படுத்தி பொதுமன்னிப்பு வழங்கினால் அவை ஹிலாரி மீதுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் பொருந்துமா? என்ற சந்தேகத்தை அரசியல் வல்லுநர்கள் எழுப்பியுள்ளனர்.

எனினும், கைது செய்யப்படுவதற்கு முன்னதாகவே தனக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் ஹிலாரி கிளிண்டன் கோரிக்கை விடுத்தாலும் அல்லது கோரிக்கையை விடுக்காமல் இருந்தாலும், ஹிலாரிக்கு நிச்சயமாக ஒபாமா பொதுமன்னிப்பு வழங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏனெனில், கடந்த 1974ம் ஆண்டு ஜெரால்டு போர்டு  தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்வதற்கு முன்னதாக பல்வெறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான ரிச்சர்டு நிக்ஸன் பொது மன்னிப்பு வழங்கியுள்ளார்.

ஆனாலும், தற்போது ஹிலாரி கிளிண்டன் மீதுள்ள குற்றச்சாட்டுகளுக்கு ஒபாமா பொது மன்னிப்பு வழங்கினாலும், சில வாரங்களில் பதவியேற்க உள்ள டொனால்டு டிரம்பின் புதிய அரசாங்கம் வேறு வழக்குகளை ஹிலாரி மீது சுமத்தினால் அவற்றில் இருந்து ஹிலாரி தப்புவது கடினம் என அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *