அனுதாபம் தெரிவிக்கும் முகமாக செந்தூரனுக்கு வடக்கில் பாடசாலைகள் இன்று மூடப்படும்


தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி, தன் உயிரை மாய்த்த கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவன் செந்தூரனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வடக்கு மாகாண பாடசாலைகள் அனைத்தும் இன்று மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவன் இராஜேஸ்வரன் செந்தூரன் நேற்றுக்காலை, தொடருந்து முன் பாய்ந்து தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.

இந்தச் சம்பவம் கல்விச் சமூகத்தில் பெரும், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவன் இராஜேஸ்வரன் செந்தூரனின் சடுதியான மரணத்துக்கு அனுதாபம் தெரிவிக்கும் முகமாக  வடக்கு மாகாண பாடசாலைகள் அனைத்தும் இன்று மூடப்படும் என்று வடக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் ஆர்.இரவீந்திரன் அறிவித்துள்ளார்.

இதற்கான பதில் பாடசாலை தொடர்பான விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் வடக்கு மாகாண கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *