12 வயது சிறுவன் சுவர்களுக்கு மத்தியில் சிக்கி 3 நாட்களுக்குப் பிறகு மீட்பு


நைஜீரியா நாட்டின் ஒடுடுவா பகுதியைச் சேர்ந்தவர் அடுராக்பிமி சகா (வயது 12) என்ற சிறுவன் தன் வீட்டை ஒட்டியுள்ள சுமார் 12 அடி அங்குளமுள்ள மதில் சுவர் ஒன்றில் விளையாடிக் கொண்டிருந்துள்ளான். அப்போது திடீரென்று சிறுவன் மதில் சுவருக்கும், வீட்டின் சுவருக்கும் இடையே உள்ள 12 அங்குல (இன்ச்) இடைவெளிக்குள் விழுந்துள்ளார். இரு சுவருக்கும் மத்தியில் விழுந்தால் அங்கிருந்தவர்கள் யாருக்கும் இச்சிறுவன் தென்படவில்லை.

ஆனால் கிழே விழுந்த பதற்றத்தில் சிறுவன் தொடர்ந்து கூச்சலிட்டுள்ளார். இது போன்று தொடர்ந்து மூன்று நாட்கள் சத்தம் போட்டும் யாரும் கவனிக்கவில்லை. பின்னர், அவ்வழியே செல்வோரின் கவனத்தை ஈர்ப்பதற்காக அந்த சிறுவன் பாட்டு பாடியுள்ளான். அந்த சத்தம் கேட்டு சிலர், சுவர் இடைவெளியில் பார்த்தபோது அந்த சிறுவன் வெளியேற முடியாமல் சுருண்டு கிடந்துள்ளான். இதையடுத்து அவர்கள் சற்று பதற்றமடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அதன் பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அந்த மதில் சுவரை உடைக்கும்படி கூறியுள்ளனர். மதில் சுவரை உடைக்கும் போது சிறுவன் தொடர்ந்து கூச்சலிட்டுள்ளான். இதனால் பதற்றமடைந்த அவர்கள் சற்று நிதானமாக சுவரை உடைக்கத் துவங்கியுள்ளனர்.

அப்போது சிறுவன் தூசி படிந்த நிலையில் அழுது கொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். வெளியே வந்த சிறுவனை குளிப்பாட்டி அவனது பாட்டியிடம் ஒப்படைத்தனர். உயிர்பிழைத்த அந்த சிறுவன தன் பாட்டியின் மடியில் அமர்ந்து அழுத சம்பவம் அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்துள்ளது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *