இங்கிலாந்து தேர்தலுக்கு மக்களிடம் கருத்துக்கணிப்பு | எதிர்க்கட்சி முன்னிலை


இங்கிலாந்தில் கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் டேவிட் கேமரூன் பிரதமராக பதவி வகித்து வருகிறார். அங்கு அடுத்த மாதம் (மே) 7-ந் தேதி பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் டேவிட் கேமரூன் மீண்டும் போட்டியிடுகிறார்.

இந்த தேர்தலுக்கு முன் தனியார் நிறுவனம் சார்பில் அங்கு மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. இதில் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி முன்னிலையில் இருப்பது தெரியவந்துள்ளது. அதன்படி தொழிலாளர் கட்சிக்கு 36 சதவீத ஆதரவும், டேவிட் கேமரூனின் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு 33 சதவீத ஆதரவும் கிடைத்தன.

அதே நேரம் ஐரோப்பிய கூட்டமைப்புக்கு எதிரான கொள்கையுடைய சுதந்திர கட்சிக்கு 13 சதவீத ஆதரவு காணப்பட்டது. மேலும் கன்சர்வேட்டிவ் கட்சியின் கூட்டணி கட்சியான லிபரல் ஜனநாயக கட்சிக்கு 7 சதவீத ஆதரவு கிடைத்தது.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *