கொட்டும் மழையில் தறப்பால் கூடாரங்களுக்குள் அவலநிலையில் வவுனியா பீடியாபாம் மக்கள்


???????????????????????????????

வவுனியாவில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழை காரணமா மல்வத்து ஓயா நீர் பெருக்கெடுத்ததனால் செட்டிகுளம் பீடியாபாமத் கிராமத்தில் 17 குடும்பங்களைச்சேர்ந்த 54 பேரின் வீடுகள் வெள்ளத்தில் முற்றுமுழுதாக மூழ்கியுள்ளது.

குறித்த கிராமத்த்தில் வசித்துவரும் மக்கள் தமது உடமைகள் அனைத்தையும் இளந்து இடம்பெயர்ந்து தாம் முன்பு இருந்த இடத்திலிருந்து ஒருகிலோமீற்றர் தொலையில் பளையபீடியாபாம் காட்டுப்பகுதியில் தறப்பால் கூடாரம் அமைத்து தங்கியுள்ளனர்.

கொட்டும் மழைக்கு ஈடுகொடுக்க முடியாதநிலையில் இருக்கும் தறப்பால் கூடாரங்களுக்குள் குழந்தைள், மற்றும், பெண்கள் நொய்வாய்பட்ட முதியவர்கள் உற்பட 54 பேர் காட்டு விலங்குகளின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் குறிப்பாக கொடிய விசப்பாம்புகள், யானைகள், அதிகம் காணப்படும் காட்டுப்பகுதிக்கள் மிகுந்த சிரமத்தின் மத்தியில் தங்கியிருக்கின்றார்கள்.

இவ்வாறு சிரமத்தின் மத்தியில் தங்கியிருக்கும் மக்களுக்கு அனர்த்த முகாமைத்துவ பிரிவு தறப்பால்கள் மற்றும் சமைத்த உணவுகளும் வழங்கப்பட்டு வருகின்றது.

சம்மந்தப்பட்ட அதிகாரிகள் குறித்தமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி தகுந்தசேவையை செய்யவேண்டுமென்று  மக்கள் எதிர்பார்கின்றனர்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *