மரணமடைந்த பிரபல இயக்குனர் சி.வி.ராஜேந்திரன்!


 

உடல் நலக்குறைவு காரணமாக பிரபல இயக்குனர் சி.வி.ராஜேந்திரன் நேற்று காலமானார். 1967 இல் வெளிவந்த “அனுபவம் புதுமை” என்ற படம்தான் இவரது முதல் படம். அதில் முத்துராமன், ராஜஸ்ரீ, ரி.எஸ்.பாலையா நடித்திருந்தனர்.

ஜேம்ஸ்பாண்ட் பாணியிலான கதையை ஜெய்சங்கர், பாரதி, நாகேஷ், ஜெயந்தி, விஜயலலிதா ஆகியோரை நடிக்க வைத்து இவர் இயக்கிய “நில் கவனி காதலி” என்ற படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. சிவாஜி கணேசனை தனது சொந்தப் படமான “ஒன்ஸ்மோர்” படத்தில் நடிக்க வைத்தார். இப்படத்தில் விஜய், சரோஜாதேவி, மணிவண்ணன், சிம்ரன் ஆகியோரும் நடித்திருந்தனர்.

இவர் இயக்கிய “கோகிலா எங்கே போகிறாள்” என்ற தொடருக்கு சிறந்த இயக்குநர் விருது கிடைத்தது.  மேலும் “கலைமாமணி’’ விருதும் இவருக்கு கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.

 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *