இங்கிலாந்தில் பள்ளியில் படிக்கும் மாணவன் கண்டறியப்பட்ட 142-வது கிரகம்


இங்கிலாந்தில் உள்ள ஸ்டாபோர்டு ஷைர் பள்ளியில் படிக்கும் மாணவன் டாம் வாக்(17).  கீலே பல்கலைக்கழகத்தின் நிதி உதவியின் கீழ் இயங்கும் ஆராய்ச்சியில் புதிய கோள்களை கண்டறியும் திட்டத்தில் இவன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது தனது 15 வயதில் கலந்துகொண்டான்.

அவன் 1000 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் நட்சத்திர கூட்டத்துக்கு இடையில் ஒளி போன்று ஒன்று ஊடுருவுவதை கண்டான். அது குறித்து ஆய்வு மேற்கொண்டான். இது ஒரு புதிய கிரகம் என்று அவன் சமற்பித்த கோப்புகளை கண்ட பிறகு தற்போதுதான் கீலே பல்கலைக்கழக நிபுணர்கள் ஒப்புக்கொண்டனர்.

இந்த புதிய கிரகம் பூமியில் இருந்து 1000 ஒளி ஆண்டு தூரத்தில் உள்ளது. இது வியாழன் கிரக வகையை சந்தித்தது. இது வியாழன்போல, இருந்தாலும், இவை தங்கள் ஹோஸ்ட் நட்சத்திரத்தின் மிக அருகில் அமைந்துள்ள வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன.

இன்னும் இதற்கு பெயர் வைக்கப்படவில்லை. wasp குழுவால் கண்டறியப்பட்ட 142-வது கிரகம் என்பதால் wasp 142b என தற்போது அடையாளம் காணப்படுகிறது.

இது குறித்து டாம் கூறும் போது புதிய கிரகம் கண்டு பிடித்திருப்பது குறித்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கு இது வியப்பை ஏற்படுத்தியுள்ளது என்றார். இவர் உலகின் முதல் மிகச்சிறிய வயதில் கிரகத்தை கண்டறிந்தவர் ஆவார்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *