சீனாவின் அண்டை நாடான தைவானில் கடந்த ஜனவரி மாதம் பாராளுமன்ற மற்றும் அதிபர் தேர்தல் நடத்தப்பட்டது. இதில், இதில் எதிர்க்கட்சியான ஜனநாயக முற்போக்குக் கட்சியைச் சேர்ந்த சாய் இங்-வென் (59) அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். ஆளுங்கட்சியின் வேட்பாளராக போட்டியிட்ட எரிக் சு தோல்வியடைந்தார். மேலும், தோல்வியை ஒப்புக்கொண்டு தனது கட்சி தலைமை பொறுப்பிலிருந்து விலகினார்.
இந்த தேர்தலையும், வாக்குப்பதிவுக்குப் பிந்தைய நிகழ்வுகளையும் சீனா உன்னிப்பாக கவனித்து வரும் நிலையில், தைவானின் முதல் பெண் அதிபராக சாய் இங்-வென் இன்று பதவியேற்றார். அதிபர் மாளிகை வளாகத்தில் உள்ள தேசியக் கொடியின் முன் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்ட அவர், சீனாவுடன் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை பராமரிக்க தைவான் உதவியாக இருக்கும் என தெரிவித்தார்.