பிரான்ஸ் போன்று பர்தா அணிய முழுமையாக தடை விதிப்பதில் உடன்பாடில்லை-பிரதமர் டேவிட் கேமரூன்


இங்கிலாந்தில் தங்கியிருக்கும் வெளிநாட்டினர் சரளமாக ஆங்கிலம் பேச வேண்டும். இல்லாவிட்டால் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என பிரதமர் டேவிட் கேமரூன்(49) சமீபத்தில் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இந்த நிலையில் நேற்று மற்றொரு அறிவிப்பை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

அதாவது பள்ளிகள் மற்றும் கோர்ட்டுகள் எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகள் உள்ளிட்ட இடங்களில் பெண்கள் பர்தா அணிய தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். இதற்கான அறிவிப்பை ரேடியோவில் பேசிய உரையின்போது வெளியிட்டார். கோர்ட்டு மற்றும் சோதனை சாவடிகளில் அடையாளம் கண்டுபிடிக்கவும், பள்ளிகளில் சீருடை கலாசாரத்தை பின்பற்றவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் கூறினார்.

குறிப்பாக இங்கிலாந்தில் வாழும் முஸ்லிம்கள் மேற்காசிய நாடுகளான ஈராக், சிரியாவுக்கு சென்று ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேருவதை தடுக்கவும் இந்த அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கம் அளித்தார். அதே நேரத்தில் பிரான்ஸ் போன்று பர்தா அணிய முழுமையாக தடை விதிப்பதில் தனக்கு உடன்பாடில்லை என்றும் அவர் கூறினார். பிரான்சில் கடந்த 2010-ம் ஆண்டு முதல் பெண்கள் பர்தா அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *