அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்தில் 18 காரட் தங்கத்தில் கழிப்பறை


அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்தில் 18 காரட் தங்கத்தில் கழிப்பறை அமைக்கப்படுகிறது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ளது கூகன்ஹைம் அருங்காட்சியகம். இங்கு, 18 காரட் தங்கத்தில் கழிப்பறை ஒன்று நிறுவப்படவுள்ளது.
இந்தக் கழிப்பறையை இத்தாலியைச் சேர்ந்த மொரீஸியோ கேட்டலான் என்ற சிற்பக் கலைஞர் வடிவமைத்துள்ளார்.
இந்தக் கழிப்பறை சிற்பத்துக்கு “அமெரிக்கா’ எனப் பெயரிட்டுள்ள அவர் பொருளாதார ஏற்றத்தாழ்வின் அடையாளமாக இது உருவாக்கப்பட்டது என்றார்.
“அமெரிக்கா’ காட்சிப் பொருளாகவும் பயன்பாட்டு இடமாகவும் அருங்காட்சியகத்தில் இடம்பெறும்.
இதுகுறித்து கூகன்ஹைம் அருங்காட்சியகத்தின் செய்தித் தொடர்பாளர் மோலி ஸ்டூவர்ட் கூறியதாவது:
18 காரட் தங்கத்தால் அமைக்கப்படும் இந்த கழிப்பறை பார்வையாளர்களை வெகுவாகக் கவரும்.
அவர்கள் தங்கக் கழிப்பறையை வெறுமனே பார்வையிடுவதோடு மட்டுமின்றி அதனை உபயோகித்தும் புதிய அனுபவத்தை உணரலாம் என்றார்.
இந்தக் கழிப்பறைச் சிற்பத்தைப் பாதுகாக்க முழுநேர பாதுகாவலர் நியமிக்கப்பட உள்ளார்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *