இறுக்கமான ஜீன்ஸ் அணிந்து கால்களை மடக்கி அமர்வது கால்களை செயலிழக்கச் செய்துவிடும்


கால்களை இறுகப் பிடிக்கும் ஜீன்ஸ் அணியும் வழக்கம் இளம் பெண்களிடையே அதிகரித்து வருகிறது.
ஆனால், இத்தகைய ஆடைகளால் கால்கள் செயலிழந்து போகும் அபாயம் உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இதுகுறித்து ஆஸ்திரேலியாவில் வெளியாகும் “தி நியூராலஜி, நியூரோசர்ஜரி & சைக்கியாட்ரி’ அறிவியல் இதழில், நரம்பியல் நிபுணர் தாமஸ் கிம்பர் கூறியுள்ளதாவது:
சில நாள்களுக்கு முன்பு 35 வயது பெண் ஒருவர், தனது இரு கால்களையும் அசைக்கவே முடியாத நிலையில் எங்கள் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.
அவரது கெண்டைக் கால் தசைகள் இரண்டும் மிக மோசமாக வீங்கியிருந்தது.
வீக்கம் காரணமாக அவர் அணிந்திருந்த ஜீன்ûஸக் கழற்ற முடியாமல், வெட்டியெடுக்க வேண்டியதாயிற்று.
அந்தப் பெண்ணால் கணுக்கால்களையே, பாதங்களையோ சரியாக அசைக்கவே முடியவில்லை.
மேலும், அந்தப் பெண்ணுக்கு முழங்கால் முழுவதும் மரத்துப் போயிருந்தது.
இத்தனைக்கும் காரணம், அந்தப் பெண் அணிந்திருந்த இறுக்கமான ஜீன்ஸ்தான்.
அந்தப் பெண்ணின் உறவினர், புதிய வீட்டுக்கு குடி பெயர்வதற்காக வீட்டை காலி செய்து கொண்டிருந்தார்.
அந்தப் பெண் இறுக்கமான ஜீன்ஸýடன் கால்களை மடக்கி தரையில் உட்கார்ந்து அந்த உறவினருக்கு உதவிகள் செய்து கொண்டிருந்தார்.
அப்போது ஜீன்ஸ் இறுக்கியதால் அவரது கால்களில் முழங்கால் பகுதிக்கு ரத்த ஓட்டம் தடைபட்டுள்ளது.
இதனால் அந்தப் பகுதியில் வீக்கம் ஏற்பட்டுள்ளது.
வீக்கத்தினால் கால்கள் விரிவடைவதற்கு ஜீன்ஸ் இடம் கொடுக்காததால், உள்புறமாக அழுத்தம் ஏற்பட்டு, நரம்புகள் அழுத்தப்பட்டுள்ளன.
இதனால் அந்தப் பெண்ணின் கணுக்கால் தசைகள் செயலிழந்தன.
ஆனால் வேலை மும்முரத்தில் அந்தப் பெண்ணுக்கு இதெல்லாம் தெரியவே இல்லை.
தரையிலிருந்து எழுந்து சிறிது தூரம் நடந்த பின்பு நிலை தடுமாறி அவர் கீழே விழுந்துள்ளார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நான்கு நாள்கள் சிகிச்சைக்குப் பின் நலமுடன் வீடு திரும்பினார்.
கால்களை இறுகப் பிடிக்கும் ஜீன்ஸ் ஆடைகளை அணிபவர்கள் அந்தப் பெண்ணின் அனுபவத்தை படிப்பினையாகக் கொள்ள வேண்டும்.
இறுக்கமான ஜீன்ஸ் அணிந்து கால்களை மடக்கி அமர்வது கால்களை செயலிழக்கச் செய்துவிடும் என்பது மருத்துவரீதியிலான உண்மை என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று நரம்பியல் நிபுணர் தாமஸ் கிம்பர் கூறினார்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *