மெக்ஸிகோவின் ரசாயன ஆலைவெடி விபத்தில் பலி 32ஆக அதிகரிப்பு


மெக்ஸிகோவில் அரசுக்கு சொந்தமான பெட்ரோலிய ரசாயன ஆலையில் கடந்த வாரம் ஏற்பட்ட வெடி விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 32-ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: மெக்ஸிகோவின் துறைமுக நகரான கோட்ஸகோல்காஸில் அரசுக்கு சொந்தமான பெட்ரோலிய ரசாயன ஆலையில் கடந்த புதன்கிழமை பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில், உயிரிழந்தவர்களைத் தேடும் பணி மோப்ப நாய் உதவியுடன் கடந்த நான்கு தினங்களாக தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டது.
இதில், கட்டட இடிபாடுகளிலிருந்து மேலும் நான்கு பேரின் உடல்களை மீட்புக் குழுவினர் மீட்டனர். இதையடுத்து, இந்த வெடி விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 32-ஆக அதிகரித்துள்ளது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *