கடத்தப்பட்ட பெண் குழந்தை 17 ஆண்டுகளுக்கு பிறகு மீட்பு


தென்ஆப்பிரிக்காவில் உள்ள கேப்டவுனை சேர்ந்த தம்பதி செலஸ்ட்–மோர்னே நர்ஸ். இவர்களுக்கு அங்குள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த 1997–ம் ஆண்டு ஏப்ரலில் அதாவது 17 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண் குழந்தை பிறந்தது.

அக்குழந்தைக்கு ஷெபானி என பெயரிட்டனர். பிறந்து 3 நாட்களே ஆன நிலையில் தாயின் அரவணைப்பில் அக்குழந்தை தூங்கிக்கொண்டிருந்தது. அப்போது அக்குழந்தையை யாரோ கடத்தி சென்று விட்டனர். பல இடங்களில் தேடியும் அக்குழந்தையை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில் லெஸ்ட்–மேர்னே நர்ஸ் தம்பதிக்கு மேலும் 3 குழந்தைகள் பிறந்தன. இருந்தாலும் காணாமல் போன ஷெபானியின் பிறந்த நாளை அந்த தம்பதிகள் கொண்டாடி வந்தனர்.

இதற்கிடையே ஷெபானி படிக்கும் பள்ளியில் இவர்களது இளைய மகள் காசிடி நர்ஸ் படித்து வருகிறாள். அவர்களது இருவரின் முக சாயலும் அச்சு அசல் ஒன்றாகவே இருந்தது.

அதை பார்த்த மற்ற மாணவிகள் அதுகுறித்து ஆச்சரியமாக பேசினர். இது குறித்து விசாரித்த போது, ஷெபானி கடத்தப்பட்டு பல இடங்களில் வேறு பல பெண்களால் வளர்ந்து வருவது தெரிய வந்தது.

அதை தொடர்ந்து 17 வருடத்துக்கு பிறகு செலஸ்ட் தம்பதியினர் ஷெபானியை மீட்டனர். டி.என்.ஏ. சோதனை நடத்தியதில் அவள் இவர்களது குழந்தை என உறுதி செய்யப்பட்டது.

அது தொடர்பாக ஷெபானியை குழந்தையாக இருந்தபோது கடத்தியதாக 55 வயது பெண் கைது செய்யப்பட்டாள்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *