வவுனியாவில் சிறுவன் சுருக்கிட்டு தற்கொலை


வவுனியா நாகர் இலுப்பைக்குளத்தில் (06-02-2015) வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் தனது வீட்டில் ஜெம்ஸ் வெனி பிரகாஸ் (17 வயது) எனும் சிறுவன் சுருக்கிட்ட தற்கொலை செய்து கொண்டுள்ளான்.

சம்பவம் குறித்து மரணித்த சிறுவனின் தாயார் ஜேம்ஸ் வெனி விஜியராணி தெரிவிக்கையில்

எனது கணவர் ஜெம்ஸ் வெனி கட்டார் நாட்டில் பணி புரிவதாகவும். ஸ்கந்தபுரம் வாணி மாகாவித்தியலயத்தில் உயர்தரம் வர்த்தகப்பிரிவில் கல்வி பயிலும் தனது மூத்த மகன் ஜெம்ஸ் வெனி பிரகாஸ் பாடசாலை சீருடை அழுக்காக இருந்த காரணத்தினால் பாடசாலைக்கு செல்லவில்லை என்று தெரிவித்தார்.

அத்துடன் தனது இரண்டாவது மகன் ஜேம்ஸ் வெனி தனுசனை பாடசாலை மாற்றுவதற்காக தான் வவுனியா நகரத்திற்கு சென்றிருந்ததாகவும் விட்டிற்கு சென்று பார்த்தபோது தனது மகன் விட்டினுள் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாகவும் தான் அயலவரின் உதவியுடன் கதவை உடைத்து மகனை மீட்டு வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும் தெரிவித்தார்.

இச்சம்பவம் குறித்து திடீர் மரணவிசாரணை அதிகாரி கிசோர் தெரிவிக்கையில்

மரணமடைந்த சிறுவனின் உடல் வவுனியா வைத்தியசாலையின் பிரேத பரிசோதனை செய்யும் வைத்தியரின் மருத்துவ அறிக்கை கிடைக்காத காரணத்தினால் தீர்ப்பு வழங்கவில்லை.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *