இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடாத்தவில்லை என மறுப்பு


ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச்சூடு ஏதும் நடத்தவில்லை என அந்நாட்டு கடற்படை செய்தி தொடர்பாளர் கமாண்டர் சமிந்தா கூறியுள்ளார். இது தொடர்பாக இலங்கை கடற்படை வெளியிட்ட செய்தி: தமிழக மீனவரை இலங்கை கடற்படை சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறப்படுவது தவறு. முதற்கட்ட விசாரணையில் மீனவர் சுட்டு கொல்லப்படவில்லை என தெரியவந்தது. ஜி.பி.எஸ்., வசதி மூலம் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. துப்பாக்கிச்சூட்டில் இலங்கை கடற்படை நடத்தவில்லை. இவ்வாறு அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை வெளியுறவுத்துறை வெளியிட்ட செய்தி: மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக இந்திய அரசு நடத்தும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவோம். தமிழக மீனவர்கள் மனிதாபிமான அடிப்படையில் நடத்தப்படுவர். மீனவர் கொல்லப்பட்டது கவலை அளிக்கிறது. இவ்வாறு செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமேஸ்வர மீனவர்கள் மீன்பிடிக்க சென்ற போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் மீனவர் பிரிட்ஜோ பலியானார். இதன் காரணமாக இப்பகுதியில் மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இலங்கை அரசு தரப்பில் மறுக்கப்பட்டுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *