உலகையே பெரும் சோகத்தில் ஆழ்த்திய இரண்டாம் உலகப்போர் முடிந்து இன்றுடன் 70 ஆண்டுகள்


உலகையே பெரும் சோகத்தில் ஆழ்த்திய இரண்டாம் உலகப்போர் முடிந்து இன்றுடன் 70 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதனையொட்டி அந்த போரில் கலந்து கொண்டு, கடும் சிரமத்திற்கிடையே வெற்றி பெற்ற பிரிட்டன், ரஷ்யா, மற்றும் ஐரோப்பிய நாடுகள் 70 வது ஆண்டு வெற்றி விழாவை இன்று கொண்டாடுகின்றன.அப்போது பிரிட்டிஷ் பிரதமராக இருந்த வின்ஸ்டன் சர்ச்சில், 70 ஆண்டுகளுக்கு முன் இதே நாள், 1945ம் ஆண்டு மே 8 ம் தேதி ” ஜெர்மனியுடனான போர் முடிந்து விட்டது ” என்று, லண்டனில் உள்ள கருவூல அலுவலக பால்கனியில் இருந்து அறிவித்தார்.

போரின் வெற்றியை நினைவூட்டும் விதமாக, போரில் உயிரிழந்தவர்களுக்காக லண்டனில் அமைக்கப்பட்டிருக்கும் நினைவிடத்தில் மக்கள் பெருந்திரளாக கூடி இரண்டு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்துகிறார்கள்.மேலும் நாடு முழுவதும் 200 க்கும் மேற்பட்ட தீபங்கள் ஏற்றப்படுகின்றன. 1939 க்கு பின் இன்று தான் முதன் முறையாக பக்கிங்காம் அரண்மனை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. இதையொட்டி, வெஸ்ட்மினிஸ்டர் அபே யில் நடக்கும் விஷேச பிரார்தணையில் ராணி உள்பட அரச குடும்பத்தினர் கலந்து கொள்கிறார்கள். அதன்பின் ராணுவ வீரர்கள் மற்றும் ராணுவ அதிகாரிகள் ஊர்வலமாக, சர்ச்சில் வெற்றியை அறிவித்த அதே கருவூல அலுவலகத்தை நோக்கி செல்கின்றனர். நாடு முழுவதும் மக்கள் வெற்றி விழாவை கொண்டாடும் விதமாக இன்று இரவு முழுவதும் ” பப் ” கள் திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *