தமிழகக் கவிஞர் சபரிநாதனுக்கு யுவபுரஸ்கார் விருது


 

தமிழகத்தைச் சேர்ந்த கவிஞர் சபரிநாதனுக்கு இந்தியாவின் சாகித்திய அகடாமி வழங்கும் இளைய எழுத்தாளர்களுக்கான யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்திய அரசு வருடம் தோறும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் விருதுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் இளைய எழுத்தாளர்களுக்காக யுவபுரஸ்கார் மற்றும் பால புரஸ்கார் விருதுகள் வழங்கப்படுவதுண்டு. அந்த வகையில் வால் என்ற கவிதைத் தொகுப்பிற்காக  தமிழகத்தைச் சேர்ந்த சபரிநாதனுக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் கோவில்பட்டியைச் சேர்ந்த சபரிநாதன் தமிழ் நவீன கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவர். களம் காலம் ஆட்டம் என்ற கவிதைத் தொகுப்பின் ஊடாக 2011ம் ஆண்டு இலக்கிய உலகுக்கு அறிமுகமானவர்.கவிஞர்

இதேவேளை பால யுவ புரஸ்கார் விருது மறைந்த எழுத்தாளர் வள்ளியப்பாவின் மகளும் எழுத்தாளருமான தேவி நாச்சியப்பனுக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழ் ஆசிரியராகப் பணிபுரிந்து வரும் தேவி நாச்சியப்பன் தனது 22 வயது முதல் குழந்தை இலக்கிய பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இதுவரையில் 12 குழந்தை இலக்கிய நூல்களை இவர் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *