சஜித்தின் முயற்சிக்கு இலங்கை அணியின் முன்னாள் வீரர் ஆதரவு


 ரொசான் மகாநாமக்கான பட முடிவுகள்"

பாலின சமத்துவத்திற்கு ஆதரவளிக்கும் எவருக்கும் தேர்தலில் ஆதரவு வழங்குவேன் என இலங்கை அணியின் முன்னாள் வீரர் ரொசான் மகநாம தெரிவித்துள்ளார்.

தனது முகநூலில் அவர் தனது இந்த கருத்தினை பதிவு செய்துள்ளார்.

பாலின சமத்துவம் என்பதை வெறுமனே சமூக ஊடக  செயற்பாடுகளுடனோ அல்லது பாரிய நிறுவன கலாச்சாரத்துடனோ மட்டுப்படுத்தக்கூடாது என குறிப்பிட்டுள்ள அவர் பாலின சமத்துவம் என்பது மகளிருக்கும் யுவதிகளிற்கும் கல்வி சுகாதாரம் வேலை வாய்ப்புகளில் சம வாய்ப்பினை வழங்குவதாகும்  என தெரிவித்துள்ளார்.

பாலின சமத்துவம் என்பது  இலங்கையின் சனத்தொகையில் 52 வீதமாக உள்ள பெண்களிற்கு அரசியல் மற்றும்  பொருளாதாரம் தொடர்பான  முடிவுகளை எடுப்பதற்கான  குரலை வழங்குவதாகவும் எனவும் ரொசான் மகநாமா தெரிவித்துள்ளார்.

மகளிர் உரிமை என்பது ஜனாதிபதி தேர்தல் விடயம் மாத்திரமல்லஅதற்கும் அப்பாற்பட்டது,எனினும் இலங்கையில்  பெண்கள் யுவதிகளின் முன்னேற்றத்திற்கு தடையாக உள்ள கிராமப்;;புறங்களில் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு தேவையான அடித்தளத்தை ஜனாதிபதி தேர்தல்  ஏற்படுத்திக்கொடுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அடிப்படை சுகாதாரவசதிகள் மற்றும் சுகதார பொருட்களை பெறுவதற்கான  வசதியின்மை பாடசாலைக்கு மாணவிகள் செல்வதில் பாதிப்பை ஏற்படுத்துகின்றது,மகளிரின்  கல்வி மற்றும் தொழில் நடவடிக்கைகளையும் அது பாதிக்கின்றதுஎனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏனெனில் இன்றும் 21 ம் நூற்றாண்டிலிலும்- பெண்களின் அடிப்படை உயிரியல் செயற்பாடு இரகசியத்திலும் வெட்கத்திலும் மூடி மறைக்கப்பட்டுள்ளது. என குறிப்பிட்டுள்ள அவர் பல வருடகால தவறான எண்ணங்களும் களங்கமனப்பான்மையுமே இதற்கு காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.

நாங்கள் இது குறித்து பேச ஆரம்பிக்காதவரை இந்த தடைகளை நாங்கள் ஒருபோதும் உடைக்கமாட்டோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மூன்று பெண்பிள்ளைகளிற்கு தந்தை என்ற அடிப்படையில்  இலங்கையில் பாலின சமத்துவத்தை ஏற்படுத்துவதில் எங்கள்தலைவர்களும் சமூகங்களும் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் உள்ளதை உறுதி செய்வது ஆண்களிற்கு முக்கிய பங்குள்ளது என நான் கருதுகின்றேன் எனவும் அவர் தெரிவித்துள்;ளார்.

பாட்மான் ஹாஸ்டாக் டிஜிட்டல் சனத்தொகையினர் மத்தியில் முக்கியமான விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது,இந்த முயற்சி;க்கு நாங்கள் எங்கள் ஆதரவையும் புரிந்துணர்வையும் மிகமுக்கியமாக எங்கள் அங்கீகாரத்தையும் வழங்கவேண்டும் என இலங்கை அணியின் முன்னாள் வீரர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் இந்த உரையாடலை தொடரவேண்டும்,இலங்கையில் உள்ள அனைத்து மகளிர் யுவதிகளிற்கும் சுகாதார பொருட்கள் கிடைக்ககூடிய நிலைமையை நாங்கள் வேகமாக ஏற்படுத்தவேண்டும்.

உங்கள் ஆதரவு தேவையாக உள்ள ஏனைய ஒதுக்கப்பட்ட குழுக்கள் குறித்தும் உங்கள் கவனத்தை ஈர்க்க விரும்புகின்றேன் எனகுறிப்பிட்டுள்ள அவர் அங்கவீனர்கள் உடலியல் குறைபாடுகள் உள்ளவர்கள் மனோநிலை பாதிக்கப்பட்டவர்கள், முன்னாள் படைவீரர்கள்,கலாச்சார சிறுபான்மையினத்தவர்கள்,துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட அனாதையான சிறுவர்கள் போன்றவர்கள் எங்கள் சமூகத்திலிருந்து ஒதுக்கப்பட்டநிலையில்உள்ளனர் எனவும் ரொசான்மகநாம  தெரிவித்துள்ளார்.

எனது பேரப்பிள்ளை பாலின சமத்துவத்தை ஒரு விழுமியமாக கருதும்  நாட்டில் வளர்வதை உறுதி செய்யும்  எந்த முயற்சிக்கும் நான் ஆதரவு வழங்குவேன் என மகநாம தனது முகநூலில் பதிவு செய்துள்ளார்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *