சங்ககால சமையல் – சுண்டல் வறுவல் | பகுதி 3 | பிரியா பாஸ்கர்


 

சுண்டல் வறுவல் 

 

நறுநெய்க் கடலை வீசைப்பச் சோறட்டு

பெருந்தோ பாலம் பூசல் மேவர

வருந்தா யாணர்த்து நந்துங் கொல்லோ

என்ற வரிகள் புறநானூறில் 120-வது பாடலில் 14-16 வரியில் உள்ளது.

பாரியின் நாடான பறம்பு நாடு அவனது வெற்றியினை குறிக்கும் நாடாகும். பகைவர்களை ஓடச்செய்து, போரிட்டு வெற்றி காண்பான் பாரி என்று புலவர் போற்றுகிறார்.

இந்நாட்டிலுள்ள சிறு குடிசையைத் தேடி வருவோருக்கு, மதுவை உண்ணக் கொடுப்பார்களாம். வீட்டில் உள்ளவர்களுக்கு நவதானியங்களுள் ஒன்றான சுண்டக்கடலையை நெய்யிலே பொரித்துக் கொடுப்பார்களாம். கூடவே சோறு சமைத்து உண்ணக் கொடுப்பார்களாம். மனைவியர் பாத்திரங்களைக் கழுவி வைப்பார்களாம்.

சுண்டல் வருவலை எப்படி செய்திருப்பார்கள் எனப் பார்ப்போம்.

 

தேவையான பொருட்கள் :

சுண்டல்

– 100 கிராம்

மிளகுத்தூள்

-1 டீஸ்பூன்

உப்பு

– தேவையான அளவு

நெய்

– 50 மி.லி

கறிவேப்பிலை

– சிறிதளவு

சீரகம்

– ½ டீஸ்பூன்

 

செய்முறை :

கடாயில் நெய்யைச் சேர்த்து, சுத்தம் செய்த சுண்டலை நெய்யில் நன்கு பொரித்துக் கொள்ளவும். கூடவே கறிவேப்பிலையைச் சேர்த்து பொரிக்கவும். இதன் சுவையை அதிகரிக்க போதுமான உப்பு, சீரகம் ரூ மிளகுத்தூளைச் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும். இதனை வேக வைத்த சாதத்துடன் சேர்த்து உண்டார்களாம்.

 

குறிப்பு :

சங்க கால மக்கள் தங்களுக்கு கிடைக்கக் கூடிய பொருட்களை கொண்டு சமைத்தார்கள்.

சுண்டல் ஒரு பழமையான நவதானியமாகும். ஹரப்பன் ஊiஎடைணையவழைn காலத்திலே பயிரிடப்பட்டு சமையலில் பயன்படுத்தப்பட்டது.

வேர்;க்கடலை 16ம் நூற்றாண்டில் விசய நகர ஆட்சியில், துருக்கியிலிருந்து கொண்டு வரப்பட்டு, பயிரிடப்பட்டது.

 

தொடரும்…

 

  சமையல் குறிப்பு கலைஞர் பி பிரியா பாஸ்கர்

 

 

முன்னைய பகுதிகள்:

http://www.vanakkamlondon.com/sanga-kaala-samaiyal-priya-basker-part-1-07-22-19/

http://www.vanakkamlondon.com/sanga-kaala-samaiyal-priya-basker-part-2-07-27-19/

 

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *