பரந்தன் இளைஞர் வட்டம் – சந்திரகுமார் சந்திப்பு


சந்திரகுமார்க்கான பட முடிவுகள்"
பரந்தன் இளைஞர் வட்டத்தனருக்கும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவர் சந்திரகுமார் அவர்களுக்குமான கலந்துரையாடல் ஒனறு இன்று மாலை அவரது அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
ஒருங்கிணைப்புக்குழு தலைவர் சந்திரகுமார் அவர்கள் ஒருங்கிணைப்புக்குழு தவைராக நியமனம் பெற்ற பின்னர் நடாத்திய முதல் சந்திப்பு இதுவாகும்.
இந்த கலந்துரையாடலில் பரந்தன் இளைஞர் வட்ட விளையாட்டுக்கழகத்தின் செயற்பாடுகள் பற்றி பாராட்டியதோடு இந்த விளையாட்டுக்கழகம் தனக்காக செயற்படுத்திய வேலைத்திட்டங்களிற்கு தனது நன்றியினை தெரிவிப்பதாக குறிப்பிட்டு எதிர்காலத்தில் இந்த விளையாட்டுக்கழகம் சம்மந்தமாக தாம் பல்வேறுபட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
அண்மையில் கிராமத்திற்கு ஒளியூட்டுவோம் என்கின்ற பெயரில் இளைஞர் வட்டம் செயற்படுத்திய மின்ளொளியூட்டல் வேலைகளுக்கு தனது விசேட பாராட்டை தெரிவித்ததோடு எதிர்காலத்தில் இந்த ஒளியூட்டல் செயற்பாட்டிற்காக புலம்பெயர் அமைப்புக்களையோ, உள்ளுர் அரசியல்வாதிகளையோ நம்பியிருக்க தேவையில்லை என்றும் அதற்கான நிதியுதவிகளை தாமே மேற்கொண்டுதவுவதாகவும் தெரிவித்தார்.
இளைஞர் வட்டம் சார்பாக பேசிய தலைவர் சந்திரகாந் அவர்கள் நீண்டகாலமாக தமது மைதானத்திற்கு ஒரு அலங்கார முகப்பு அமைக்கப்படவேண்டிய தேவை உள்ளதாகவும் இதுசம்மந்தமாக புலம்பெயர் அங்கத்தவர்களிடம் கோரிக்கையினை வைத்தபோதும் இன்றுவரை அதற்கான நிதியுதவியினை செய்வதற்கு எவரும் முன்வராத நிலையில் இந்த அலங்கார முகப்பினை திரு சந்திரகுமார் அவர்களை அமைத்துதவும்படி கோரினார்.
அதற்கு சந்திரகுமார் அவர்கள் அதற்கான வரைபடத்தினையும், செலவு மதிப்பீட்டினையும் தருமாறு குறிப்பிட்டதுடன் அதற்கான பூர்வாங்க வேலைகளினை ஏற்பாடுசெய்யுமாறும் கூறினார். அத்துடன் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள விளையாட்டுக்கழகங்களின் அபிவிருத்தி சம்மந்தமான கலந்துரையாடல்களை தாம் தொடர்ந்து மேற்கொள்ள உள்ளதாகவும் இதற்கு இளைஞர் வட்டம் முன்உதாரணமாக திகழவேண்டும் எனவும் குறிப்பிட்டார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *