அதிசய மின்விளக்கு!


அனைவருக்கும் வணக்கம். இன்று நாம் ஆனந்தமாக உலாவரும் இந்த உலகத்தின் உண்மையான நிறம் என்னவென்று தெரியுமா !? கருப்பு இது எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை. உலகத்தில் மிகவும் அழகான நிறமும் கருப்புதான்.

சரி இது ஒரு புறம் இருக்கட்டும். இந்த கருப்பு நிறத்திற்கு தினமும் வெள்ளையடித்து விடிய செய்கிறது கதிரவன் அதைதான் பகல்என்கிறோம். இந்த பகலிற்குள் தினமும் ஆயிரம் மாற்றங்கள் உள்ளிழுக்கும் சுவாசக் காற்றாய் விரும்பியும், விருப்பமின்றியும் தினமும் நம் ஒவ்வொருவராலும் சுவாசிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றது. இதே போன்றுதான் இரவும். இதுவரை நடந்த கருத்துக் கணிப்பின்படி உலகத்தில் அதிகமானவர்கள் விரும்புவது இரவு பொழுதுகளைத்தானாம். இந்த இரவுக்கும் மின்விளக்குகள் என்னும் ஆபரணங்களை அணிவித்து அழகு பார்த்தவன்தான் இன்றைய அவசர உலகத்தில் சுவாசிப்பதைக்கூட தேவையற்ற வேலையென்று சொல்லும் நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கின்றான்.

சரி இரவுக்கு அழகு சேர்ப்பதே விளக்குகள்தான் இந்த விளக்குகள் பற்றி அதிகமாக மின் விளக்குகள் பற்றி நம் எல்லோருக்கும் நன்கு தெரியும். ஆனால் உலகத்தில் மிகவும் பழமை வாய்ந்த மற்றும் இதுவரை அணையாமல் எரிந்துகொண்டிருக்கும் ஒரு அதிசய மின் விளக்கைப் பற்றி எத்தனை பேருக்குத் தெரியும் என்று தெரியவில்லை.

அதைப் பற்றி அனைவரும் அறிந்துகொள்ளவேண்டும் என்பதன் நோக்கம்தான் இன்றைய இன்று ஒரு தகவல். சரி இனி நாம் தகவலுக்கு வருவோம். பொதுவாக நமது வீடுகளிலும் மின் விளக்குகளை பயன்படுத்துகிறோம் அவற்றை நாம் அதிகமாக இரவுகளில் மட்டுமே பயன்படுத்துவது வழக்கம் . அந்த இரவு நேரங்களிலும் சில மணிநேரங்களை பயன்படுத்துகிறோம்.

ஆனால் ஒரு மின்விளக்கு நூறு ஆண்டுகளையும் கடந்து இன்னும் அணையாமல் எரிந்துகொண்டிருக்கிறது என்றால் நம்புவீர்களா ?!!! சரி இப்படி ஒரு வியப்பான அந்த மின் விளக்கு எங்குதான் இருக்கிறது என்று தெரிந்துகொள்ள உங்கள் அனைவருக்கும் ஆர்வம் அதிகரித்திருக்கும் என்று நினைக்கிறேன்.

இந்த பழமை வாய்ந்த அதிசய மின் விளக்கு அமெரிக்காவில் வடக்குகலிபோர்னியாவில் உள்ள லிவர்மோர் தீயணைப்பு நிலைய வண்டியில் பொருத்தப்பட்டு உள்ளதாம். இந்த அதிசய மின் விளக்கை அடோல்ப்சைலெட் என்ற கண்டுபிடிப்பாளர்தான் இதை உருவாக்கி இருக்கிறார்.

இந்த விளக்கில் என்ன சிறப்பு என்றால் இந்த விளக்கை உருவாக்க இருபத்தி எட்டு மாதங்கள் (2.4 வருடங்கள்) ஆகியதாம். அது மட்டும் இல்லாது இந்த விளக்கைப் போன்று மற்றொரு விளக்கை எப்பொழுதும் யாரும் உருவாக்கவே இயலாத வகையில் இந்த விளக்கைத் தயாரிக்க உதவும் குறிப்புகளை இந்த அடோல்ப் சைலெட் எரித்துவிட்டாராம்.

அதுமட்டும் இல்லாது இதே போன்ற விளக்கை இனி வரப்போகும் எந்த மனிதராலும் உருவாக்க இயலாது என்றும் அவரின் குறிப்பில் எழுதி இருந்தாராம். இதை ஒரு மிகப்பெரிய சவாலாக எண்ணி அமெரிக்காவில் ஒரு குழு பல வருடங்களாக இந்த விளக்கை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு இதுவரை வெற்றிபெற இயலவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இறுதியாக அந்த குழுக்கள் கொடுத்த அறிக்கையில் இப்பொழுதைய நிலையில் இந்த விளக்கை உருவாக்குவது என்பது சாத்தியமற்றது என்று கூறி இருக்கிறார்கள் என்றால் பார்த்துகொள்ளுங்கள் இந்த விளக்கில் எவ்வளவு மர்மங்கள் மறைந்திருக்கும் என்று .

அடோல்ப் சைலெட் என்பவரால் உருவாக்கப்பட்ட இந்த மின் விளக்கு முதன் முதலில் ஆயிரத்தி தொள்ளாயிரத்து ஒன்றாம் ஆண்டு (1901) எரியத் தொடங்கி இன்றுடன் நுற்றிப் பத்து வருடங்களாகியும் (110) இன்னும் எந்தவித தடங்களும் இன்றி எரிந்துகொண்டே இருக்கிறதாம். இந்த அதிசயத்தை பார்க்கவரும் மக்களின் எண்ணிக்கை மட்டும் நாள் ஒன்றிற்கு பல ஆயிரங்கள் என்றால் பார்த்துகொள்ளுங்கள்.

 

நன்றி : பனித்துளி சங்கர்Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *