அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை – ஆன்மீக சொற்பொழிவு


எப்போ வருவாரோ என்ற தொடர் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சியின் இரண்டாம் நாளான ஜனவரி 2ஆம் திகதி இமயமலையிலிருந்து வந்த 95 வயதுடைய துறவி ஸ்ரீ ஸ்ரீ ஷண்முகானந்தா சுவாமிகள் சொற்பொழிவு ஆற்றியிருந்தார்.

இந்த பிரபஞ்சம் முழுவதும் ஆத்ம சக்தி நிரம்பியிருக்கின்றன. தவம் மூலமாக தான் அதை அடைய முடியும். இந்த தபசிகளுக்கு நேரம் காலம் இல்லாமல் பெரும் தவம் புரிந்திருக்கின்றோம். ஆக பெரும் ஆத்ம சக்தியை புரிந்து கொண்டதால் தான் உணவு இல்லாத இடத்திலும் இருக்க முடிந்தது.

உணவு ஒவ்வொருவருக்கும் மிக பெரிய கொடை, அதை எப்படி கையாள்வது, அதற்கு தான் இயற்கையோடு ஒன்றியிருக்க வேண்டும். உணவே மிக பெரிய செல்வம், இங்கு யாரால் எந்த சிக்கலுமின்றி(நோயின்றி) உணவை புசிக்க முடிகிறதோ அவனே பெரும் செல்வந்தன் ஆவான். இருப்பினும் உண்பதோடு மட்டும் கடமை முடிந்து விடுவதில்லை.

நான் துறவறம் செல்லும் என் அம்மாவிடம் “நான் போயிட்டு வாரேன்” என்று சொன்னேன். அதற்கு “நான் பல சாதுக்களுக்கு அளித்த உணவு உண்மையாக இருந்தால் உனக்கும் செல்லும் இடமெல்லாம் உணவு கிடைக்கும் என்றால் அம்மா” ஆம், உணவு வேண்டி நம்மிடம் யார் வந்தாலும் மறுதலிக்காமல் உணவு கொடுக்க வேண்டும்.

அது யாராக இருந்தாலும் உணவின்றி தவிப்பது பாவம். இன்று வரை என் ஆசிரமத்திற்கு யார் வந்தாலும் சாப்பிடாமல் போவது கிடையாது. அன்று, அதை தான் வள்ளலாரும் சொன்னார் அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை என்று. அதுவே நம்மை ஆனந்தம் அடையச் செய்யும் என்கிறார்.

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நடத்திவரும் இந்நிகழ்வில் நூற்றுக்கணக்கான மக்கள் சொற்பொழிவினை பக்தியுடன் கேட்டமை குறிப்பிடத்தக்கது.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *