எக் குற்றத்தையும் நாட்டுக்காக சுமப்பேன்: சவேந்திர சில்வா


போர் குற்றம் குறித்த குற்றங்கள் தொடர்பில்  கருத்து தெரிவிப்பவர்கள் இயற்கை நீதிக்கான நியதிகளின் அடிப்படையில் செயற்படுவது பொருத்தமானதாகும் எனத் தெரிவித்த இராணுவத் தளபதி லென்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா, எக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டாலும் நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் என்றும் கூறினார்.

இராணுவ தளபதியின்  கடமைகளை பொறுப்பேற்றதன் பின்னர் இன்று தலதா மாளிகையின்  மத வழிபாட்டில் ஈடுப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

புலனாய்வு பிரிவினரை பலப்படுத்த வேண்டியது பிரதான விடயமர்கும். புலனாய்வு பிரிவினரை மையப்படுத்தியே தேசிய பாதுகாப்பு செயற்படுத்தப்படுகின்றது. நாட்டுக்காகவும் மக்களின் பாதுகாப்பிற்காகவும் செயற்படும்போது எச்சவால்களையும் எதிர்க்கொண்டு முன்னேறி செல்வோம் என்றும் அவர் இதன்போது கூறினார்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *