வயித்துல வளர்ற குழந்தை கொழுகொழுன்னு ஆரோக்கியமா பிறக்கணுமா?… அப்போ இதெல்லாம் செய்யணும்…


குழந்தை வளர்ச்சிக்கும் மார்பக மற்றும் கர்ப்பப்பை விரிவடையவும் புரதச்சத்து மிக ஆவசியம். அதுவே குழந்தையின் ஆரோக்கியத்தையும் தீர்மானிப்பதாக இருக்கிறது.

ஆகையால் உணவில் அதிகமாக பால், முட்டை, சீஸ், பயறு ஆகியவற்றைச் சேர்க்கவும்.

மருத்துவர் கொடுக்கும் அயர்ன் ஃபோலிக் நிறைந்த  மாத்திரைகளை 5வது மாதத்தில் இருந்து கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

கர்ப்பிணி பெண்கள் பெரும்பாலும் நைட்டி தான் அணிகிறார்கள்.நைட்டியினை இரவில் மட்டுமே அணியவும். காலை நேரங்களில் காட்டன் சல்வார், கனம் அதிகமில்லாத புடவை அணிந்து கொள்ளலாம். அதிகம் இறுக்கமில்லாத உள்ளாடைகளை அணிவது அவசியம்.

நெல்லிக்காய், ரோஜா இதழ்கள், தேன், கல்கண்டு, சேர்த்து குல்கந்து செய்து சாப்பிட்டால் இரும்பு சத்து அதிகம் கிடைக்கும். குழந்தையும் கலராகப் பிறக்கும்.

அதிகமாக பச்சை காய்கறிகள், பழங்கள் கீரைகள், ஈரல் சேர்க்கவும்.

நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.

அதிக காரமான உணவுகள், எண்ணெயில் பொறித்த உணவுகளைத் தவிர்த்தல் அவசியம்.

உணவுகள் அதிகம் சூடு இல்லாமல் கொஞ்சம் ஆறிய பிறகு சாப்பிடப் பழகுங்கள்.

மலசிக்கல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

மனச்சோர்வுடன் இருந்தால் உடலில் சுரக்கும் சில சுரப்பிகள் சரியாக செயல்படாமல் போய்விடும். இதனால் பிறக்கும் குழந்தை எடை குழறவாகப் பிறக்க வாய்ப்புண்டு. ஆகையால் எப்போதும் கலகலப்பாக இருங்கள்.

தினசரி சிறிது நேரம் மருத்துவரின் ஆலோசனையின் படி உடற்பயிற்ச்சி செய்யவும்.

முடிந்த வரை நிறைய நேரம் ஓய்வெடுங்கள்.

வயிற்றை காய போடாமல் 2 மணி நேரத்துக்கு ஒரு முறை சாப்பிடவும்.

 

நன்றி : EENADU INDiA

 One thought on “வயித்துல வளர்ற குழந்தை கொழுகொழுன்னு ஆரோக்கியமா பிறக்கணுமா?… அப்போ இதெல்லாம் செய்யணும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − seventeen =