கோவையில் நாளை சிலப்பதிகார விழா.


ஸ்ரீ கிருஷ்ணர் ஸ்வீட்ஸ் மற்றும் இளங்கோவடிகள் இலக்கிய மன்றம் இணைந்து நடத்தும்  35 ஆம் ஆண்டு சிலப்பதிகார விழா நாளைய தினம்  மாலை 6.30 மணிக்கு கோயம்புத்தூரின், கிக்கானி மேல்நிலைப்பள்ளியின் , சரோஜினி நட்ராஜ் கலையரங்கத்தில் நடைபெற இருக்கிறது.

இவ்விழாவில் ‘சீறியது அறம், சிதைந்தது சிலம்பு, எழுந்தது எரிதழல்’ என்கின்ற தலைப்பில், பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் சிலப்பதிகாரம் குறித்து  சிறப்புரை ஆற்றுகிறார்.

நிகழ்வின் இன்னோரு பகுதியாக நடைபெற இருக்கும், விருது வழங்கும் நிகழ்வில் முனைவர் சோ சத்தியசீலன் அவர்களுக்கு “டாக்டர் உவேசா” விருது வழங்கப்பட உள்ளது.
இந்நிகழ்விற்கு அனுமதி இலவசம் என்று  ஸ்ரீ கிருஷ்ணர் ஸ்வீட்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்படுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *