முதல் நிலையில் உள்ள சிமோனா ஹலெப் தோல்வி!


 

மாட்ரிட் பகிரங்க டெனிஸ் போட்டியின் மகளீர் ஒற்றையர், காலிறுதி போட்டி ஸ்பெயினில் நடைபெற்று வருகின்றது இதில் முதல் நிலையில் உள்ள ருமெனியா நாட்டை சேர்ந்த சிமோனா ஹலெப் தோல்வியடைந்துள்ளார்.

செக் குடியரசை சோந்த கரோலினா பிளிஸ்கோவாவிடம் 6க்கு 4, 6க்கு3 என்ற நேர் செட் கணக்கில் அவர் தோல்வியடைந்துள்ளார்.

பகிரங்க டெனிஸ் போட்டிகளில் இரண்டு முறை வெற்றியாளராகவும், மாட்ரிட் பகிரங்க டெனிஸ் போட்டிகளில் தொடர்ந்து 15 போட்டிகளில் வெற்றியையும் பெற்றிருந்த இவர் தற்போது தோல்வியை சந்தித்துள்ளார்.

இதேவேளை, மற்றுமொரு காலிறுதிப் போட்டியில், நெதர்லாந்தை சேர்ந்த கிகி பேரென்ஸ் 4க்கு 6, 6 க்கு 2, 6 க்கு 3 என்ற நேர் செட் கணக்கில் முன்னாள் முதன்மை வீராங்கனையான ரஷ்யாவின் மரிய ஷரபோவாவை தோற்கடித்துள்ளார்.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *