“சினம்கொள்” தடைகளை வென்ற இயக்குநருடன் சிறப்புப் பேட்டி


main photomain photomain photo

ஈழத்தமிழர்களின் பின்போர்க்கால வாழ்வியலைச் சித்தரிக்கும் அபூர்வமான திரைப்படைப்பாகப் பலத்த வரவேற்பை சினம்கொள் என்ற முழு நீளத்திரைப்படம் பெற்றுள்ளது. இதன் இயக்குனரான ரஞ்சித் ஜோசப் தனது மதிநுட்பமான திரையாடலால் (screenplay) இலங்கை ஒற்றையாட்சி அரசு தமிழ்க்கலைஞர்கள் மீது விதித்திருக்கும் மூன்று நிர்ப்பந்தங்களுக்கூடாகவும் சுழியோடியிருக்கிறார். அது மட்டுமல்ல, பதினோர் இடங்களில் ஒலியைச் சற்றே தணிக்கை செய்தால் போதும் என்ற நிபந்தனையோடு இந்தியாவின் தணிக்கைக் குழுவின் அங்கீகாரத்தை வென்றெடுத்த முதலாவது ஈழத்தமிழர் போராட்டம் சார்ந்த திரைப்படைப்பாகவும் சினம்கொள் விளங்குகிறது. முழுமையாக ஈழத்தமிழ்க் கலைஞர்களின் நடிப்பில் வடக்கின் மூன்று மாவட்டங்களில் எழுபது இடங்களில் சினம்கொள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.

தமிழகத் திரையுலகத்து புகழ்மிகு இயக்குநர் பாரதிராஜாவும் இயக்குநர் வெற்றிமாறனும் பிரபல திறமை நடிகர் நாசர் அவர்களும் சினம்கொள் தயாரிப்பை வியந்து பாராட்டியுள்ளனர்.

பின்போர்க்காலத்து வன்னியின் துணிகரமான இளம் எழுத்தாளர்களில் ஒருவராக அறியப்பட்டிருக்கும் தீபச்செல்வன் சினம்கொள் திரைப்படத்தின் வசனத்தை அமைத்திருக்கிறார்.

தோல்விமனப்பான்மைக்குப் பலியாகித் தமது படைப்பாற்றலை ஆற்றுப்படுத்த இயலாது தத்தளித்துக்கொண்டிருக்கும் கலைஞர்களால் அல்லற்படுவதல்ல ஈழத்தமிழர் தேசம் என்ற செய்தியைச் சொல்லவந்திருக்கின்ற புதிய தலைமுறைப் படைப்பாளியாக கனடாவில் வதியும் ஈழத்து இயக்குநர் ரஞ்சித் ஜோசப் அவர்களைக் காணமுடிகிறது.

பங்கேற்ற பெரும்பாலான நடிகர்களுக்கு இதுவே முதல் திரைப்பட நடிப்பாக இருந்தபோதும், எங்குமே சலிப்புத் தட்டாத வகையில், இயல்பான நடிப்போடு உயிரோட்டத்துடன் பார்ப்போரின் கவனத்தை முடிவுவரை ஈர்த்து வைத்திருக்கும் படைப்பாக சினம்கொள் வெளிப்படுகிறது.

ஈழத்தமிழ் மக்களின், அவர்தம் முன்னாள் போராளிகளின், வாழ்வியலை உலக மானுடத்துக்கும் தமிழர்களின் அடுத்த தலைமுறைக்கும் எடுத்தியம்பும் மண்சார்ந்த படைப்பொன்றை ஆக்கவேண்டும் என்ற தனது பத்து வருட உந்துதலின் வெளிப்பாட்டைத் தருணம் தவறாமல் செய்து முடித்திருக்கிறார் ரஞ்சித்.

அதுமட்டுமல்ல, ஈழத்திரைக்குப் புத்துயிரை ஊட்டியிருக்கும் அந்த இயக்குநரின் உள்ளக்கிடக்கை தான் என்ன என்ற ஆர்வத்துடன் கூர்மை இணையம் அவருடன் ஒரு தொலைபேசி நேர்காணலை மேற்கொண்டபோது நாம் ஊகித்ததை விடவும் ஆழமானவர் அவர் என்பதை உணர முடிந்தது.

அவருடான நேர்காணல் வருமாறு:

“இருண்டு கிடக்கிற இந்த நந்திக்கடல். இந்த நந்திக்கடலில் இருந்து எங்களுக்கொரு கண்ணகி வருவாள். அவளுடைய கோபத்தைத் தீர்க்க எந்தக் கடலாலும் ஏலாது,” என்ற அசரீரி தங்கள் படத்தின் ஒரு கட்டத்தில் மிகவும் உணர்ச்சி பூர்வமாக வெளிப்படுகிறது, இந்த அசரீரி யாருடையது, இந்தக் கருத்தின் பின்புலத்தை விளக்கமுடியுமா?

இயக்குநர் பாரதிராஜாவைப் போல இந்தப் படத்தைப் பார்த்த வேறு சினிமாத் துறை சார்ந்தவர்களின் விமர்சனம் எவ்வாறு வெளிப்பட்டிருக்கிறது என்று சொல்லமுடியுமா?

இவ்வாறான ஒரு திரைப்படத்தை இலங்கையில், அதுவும் குறிப்பாக தமிழர் தாயகத்தில் காட்சிப்படுத்துவது எவ்வாறு சாத்தியமாகியது?

மூன்று மாவட்டங்களிலுமான சினம்கொள் படத்தின் காட்சிப்படுத்தல் பற்றி மேலும் விபரமாகச் சொல்லமுடியுமா?

தோல்விமனப்பாங்குக்குப் பலியாகாமல் ஒரு போராட்டத்தின் தார்மீகத்தை, ஓர்மத்தை வெளிக்கொணர்ந்த ஓர் அபூர்வமான கலைப்படைப்பாக சினம்கொள் படத்தைப் பார்க்கின்றபோது உணரமுடிந்தது. இது குறித்த தங்கள் மனப்பாங்கை விபரியுங்கள்.

ஒரு புலம் பெயர் ஈழத்தமிழ் இயக்குநரால் இந்தப் படம் இயக்கப்பட்டிருப்பதான ஓர் உணர்வு இந்தப் படத்தைப் பார்க்கும் போது ஏற்படவில்லை. அந்த அளவுக்குத் தங்களால் இயக்கமுடிந்தமைக்கான முன் தயாரிப்பு பற்றி சொல்லமுடியுமா?

இந்த முழுநீளத்திரைப்படத்தை தயாரிக்கவேண்டும் என்ற ஆவல் தங்களுக்கு எப்போது, எவ்வாறு ஏற்பட்டதென்ற பின்னணியை சொல்வீர்களா?

சினம் கொள் திரைப்படத்தில் ஈழத்தமிழ்க்கலைஞர்களினதும் தமிழகக் கலைஞர்களினும் வகிபாகம் எவ்வாறு இருக்கிறது என்பதைப் பற்றிக் கூறமுடியுமா?

சினம்கொள் நிலத்தைப் பற்றி மட்டுமல்ல, எதிர்காலச் சந்ததியின் கல்வியைப் பற்றியும் அடுத்த தலைமுறையின் ஒழுக்கத்தைப் பற்றியும் கூடப் பேசவிழைகிறது. இவ்வாறு செய்கின்ற போது ஒரு பிரச்சாரத் தொனி வெளிப்படாமல் அதை நுட்பமாகக் கையாண்டிருக்கிறீர்கள். அதைப் பற்றி சிறிது விளக்கமுடியுமா?

சினம்கொள் திரைப்படத்திற்கு இந்திய தணிக்கைச் சான்றிதழ் கிடைத்திருக்கிறதாக அறிகிறோம். அப்படியானால், முற்றுமுழுதாக ஈழத்தில் தயாரிக்கப்பட்டு இந்தியாவில் தணிக்கைச் சான்றிதழ் பெற்ற முதலாவது படமாக இது அமைகிறதா? இது எவ்வாறு சாத்தியமாகியது?

இலங்கையில் இந்தப் படம் திரையிடப்படும் வாய்ப்பிருக்கிறதா? வேறு எங்கு திரையிட இருக்கிறீர்கள்? 

பெரும்பாலான உலகத் திரைப்படங்கள் நேரடி ஒலிப்பதிவையே மேற்கொள்கின்றன. ஆனால், இந்தியப் படங்களில் ஒலி மீள் பதிவை (டப்பிங்) மேற்கொண்டே பெரும்பாலான திரைப்படங்கள் தயாரிக்கப்படுகின்ற சூழல் நிலவுகிறது. சினம் கொள் திரைப்படத்தில் நேரடியான  ஒலப்பதிவை நீங்கள் மேற்கொண்டிருப்பதை தமிழகத்து இயக்குநர் பாரதிராஜாவே பார்த்து அதிசயித்திருக்கிறார். அது பற்றி சிறிது விளக்கமுடியுமா?

தமிழக இயக்குனர் பாராதிராஜா அவர்களுடன் ரஞ்சித்

தமிழக இயக்குனர் பாராதிராஜா அவர்களுடன் ரஞ்சித்


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *