பிரபல இந்திய பாடகருக்கு சிறைத் தண்டனை!


ஆட்கடத்தலில் ஈடுபட்ட குற்றத்திற்காக பிரபல இந்திய பாப் இசை பாடகரான தலிர் மெகந்திக்கு பஞ்சாப்  பாட்டியாலா நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.  ஆனால், தண்டனைக்கு எதிராக அவர் மேல்முறையீடு செய்துள்ளதால் அவருக்கு இப்பொழுது பிணை வழங்கப்பட்டுள்ளது.

தலீர் மெகந்தியும் அவரது சகோதரரான சம்சீரும் சட்ட விரோதமாக தங்கள் இசைக்குழுவினரின் அங்கத்தவர்களைப் போல ஆட்களைக் கடத்திச் செல்ல 1 கோடி ரூபாய் பெற்றதாக 2003 ஆம் ஆண்டு பக்சிஸ் சிங் என்பவர் குற்றஞ்சாட்டினார்.

அதே போல், 1998 மற்றும் 1999 இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு சென்ற போது தங்கள் குழுவினரைப் போல 10 பேரை சட்டவிரோதமாக அழைத்த சென்றதாகவும் பல குற்றச்சாட்டுகள் எழுந்தன.  முதலில் காவற்துறை தலிர் மெக்ந்திக்கு எதிராக வழக்கு பதிவுச் செய்திருந்தாலும் 2006 ஆம் ஆண்டில், தலிர் மெகந்தி குற்றமற்றவர் எனக் குறிப்பிட்டுஇரண்டு மனுக்களை தாக்கல் செய்தது. ஆனால் அதனை நீதிமன்றம் நிராகரித்து.

இந்த நிலையில், பிரதான குற்றவாளியான மெகந்தியின் சகோதரர் சம்சீர் இறந்துவிட்ட போதிலும் வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வந்தது. வழக்கு விசாரனையின் போது தான் குற்றமற்றவர் என தலீர் மெகந்தி சொல்லி வந்த போதிலும் அவருக்கு இரண்டு ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தீர்ப்பு தொடர்பாக தன்னுடைய டீவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்ட தலீர் மெகந்தி, “இது என்னை வருத்தமடையச் செய்கிறது. ஆனாலும் கடவுளின் மீது நான் முழுமையான நம்பிக்கையைக் கொண்டிருக்கிறேன். அது உண்மையை விரைவில் வெளிக்கொண்டு வரும்” எனக் கூறியிருக்கிறார்.

1990 களில் தன்னுடைய பாடல்கள் மூலம் பிரபலமடைந்த தலீர் மெகந்தி, பாலிவுட்டில பல பாடல்களை பாடியுள்ளார். வெளிநாடுகளில் இசை நிகழ்ச்சிகள் நடத்துவதிலும் இவர் பிரபலமானவர். பாகுபலி, குசேலன் உள்ளிட்ட படங்களுக்காக இவர் தமிழிலும் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Report by,

Migration Correspondent, 

Altamira World Wide

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *