சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘எங்க வீட்டு பிள்ளை’ அறிவிப்பு


இயக்குநர் பாண்டிராஜ், நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து ‘எங்க வீட்டு பிள்ளை’ என்ற திரைப்படத்தை இயக்கிவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. இந்த படத்துக்கு டி.இமான் இசையமைக்க, நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கின்றார்.

இந்த படத்தில் பாரதிராஜா, சமுத்திரக்கனி, அனு இமாணுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ், யோகிபாபு, சூரி, நட்டி நட்ராஜ், ஆர்கே சுரேஷ் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர்.

இந்த படத்துக்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் வெற்றி திரைப்படமான ‘எங்க வீட்டு பிள்ளை’ என்ற திரைப்படத்தின் தலைப்பு தேர்ந்தெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி – najee



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *