சிவகார்த்திகேயனின் 16-வது பட அறிவிப்பு!


சிவகார்த்திகேயன் தற்போது ரவிக்குமார் இயக்கத்திலும் பி.எஸ்.மித்ரன் இயக்கத்திலும் நடித்து வருகிறார். ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் மிஸ்டர்.லோக்கல் திரைப்படம் வருகிற மே 17-ம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

பாண்டிராஜ் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாக இருக்கும் இப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போது இப்படத்திற்கு இமான் இசையமைக்க இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

சிவகார்த்திகேயனின் 16-வது படமாக உருவாகும் இதில் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பட்டியலை விரைவில் அறிவிக்க இருக்கிறார்கள்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *