வரலாற்று சிறப்புமிக்க குருந்தூர் ஆதிசிவனுக்கும், ஐயனாருக்கும், பொங்கல் வழிபாடு


 

வரலாற்று சிறப்புமிக்க குருந்தூர் ஆதிசிவனுக்கும்ஐயனாருக்கும்பொங்கல் பொங்கி  வழிபாடு.மேற்கொள்ளப்பட்டுள்ளது

முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலையில் 2018.10.05(சனி) இன்றைய தினம் பொங்கல் வழிபாடுகள் இடம்பெற்றுள்ளது.

குமுழமுனைப் பகுதி இளைஞர்கள் ஒன்றுகூடி இந்த பொங்கல் பொங்கி, பூசை வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வழிபாடுகளில் குமுழமுனை இளைஞர்களுடன் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களும் கலந்துகொண்டுள்ளார்

குறித்த மலைப்பகுதியில் புத்தர் சிலை ஒன்றை வைப்பதற்காக இரண்டு பௌத்த மத துறவிகள் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் சென்று பாரிய குழப்பம் ஏற்படுத்தியதோடு இந்த விடயம் தொடர்பில் முல்லைத்தீவு நீதிமன்றில் வழக்கு இடம்பெறுவதால், பாரம்பரியமாக வழிபாடு நடத்திய மக்கள் தமது வழிபாடுகளில் ஈடுபட நீதிமன்று அனுமதி அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *