பிரதமர் நரேந்திர மோடிக்கு இவ்வாண்டிற்கான சியோல் அமைதி விருது!


இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு 2018 ஆம் ஆண்டிற்கான சியோல் அமைதி விருது வழங்கப்பட்டுள்ளது.
சியோல் அமைதி விருது 1990 ஆம் ஆண்டு  கொரியாவில் உள்ள சியோல் என்ற இடத்தில் அறிவிக்கப்பட்டது. உலக நாடுகள் மத்தியில் நடப்புணர்வை வளர்க்க மற்றும் அமைதியை நிலைநாட்ட உதவிய நபர்களை அங்கீகரிக்கும் விதமாக இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில், 2018 ஆம் ஆண்டு சியோல் அமைதி விருதுக்காக உலகம் முழுவதிலுமிருந்து 1300 பேர் பரிந்துரை செய்யப்பட்ட நிலையில், இவ்விருது இந்திய பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டுள்ளது. சியோல் அமைதி விருது வழங்கும் கூட்டமைப்பின் தலைவர் குவோன் இஹைக் இந்த விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் “1.3 பில்லியன் இந்திய மக்களின் வாழ்க்கையில் முன்னேற்றத்தை பிரதமர் மோடி கொண்டுவந்துள்ளார். மக்களின் பொருளாதார  வாழ்க்கையை முன்னேற்ற தொடர்ந்து முயற்சிகள் எடுத்து வருகிறார்.
தனது நாட்டின் வளர்ச்சிக்காக சர்வதேச நாடுகளுடன் தொழில்ரீதியான ஒப்பந்தங்களை செய்துள்ளார். தனது நாட்டின் அமைதிக்காக மட்டுமல்லாது உலக அமைதியை நிலைநாட்ட தொடர்ந்து உழைத்து வருகிறார். மேலும் அவர் அமுல்படுத்திய பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் இதர வளர்ச்சி பணிகளால் இந்தியா பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைந்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *