இலங்கையில் கோர விபத்து : பெண்கள் உட்பட 5 பேர் பலி!


பொலன்னறுவையில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட கோர விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் 4 பெண்கள் உட்பட ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.

மட்டக்களப்பு – பொலன்னறுவை வீதியின் வெலிகந்த பகுதியில் விபத்து இடம்பெற்றுள்ளது. வேன் ஒன்றும் உழவு இயந்திரம் ஒன்றும் மோதிக்கொண்டமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளான உழவு இயந்திரத்தில் பயணித்தவர்கள் அனைவருமே பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் பெலியத்த பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் 29 – 60 வயதிற்கு உட்பட்டவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதிக வேகமும், வான் சாரதியின் கவனயீனமுமே விபத்துக்கு காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

  

நன்றி -vavuniyanetLeave a Reply

Your email address will not be published. Required fields are marked *