8000 வெளி­நாட்­ட­வர்­களை இலங்கை நாடு கடத்த தயார்!


விசா காலா­வ­தி­யான நிலையில், இலங்­கையில் தங்­கி­யுள்ள 8000 வெளி­நாட்­ட­வர்கள் இலங்­கை­யி­லி­ருந்து நாடு கடத்­தப்­ப­ட­வுள்­ளனர்.

இதற்குத் தேவை­யான நிதி மற்றும் ஒழுங்­கு­களைச் செய்­வ­தற்கு, அமைச்­ச­ர­வையின் ஒப்­பு­தலை உள்­நாட்டு விவ­கார அமைச்சு கோர­வுள்­ளது.

ஏப்ரல் 21 தாக்­கு­த­லுக்குப் பின்னர், விசா காலா­வ­தி­யான பின்­னரும், இலங்­கையில் தங்­கி­யுள்ள 7900 வெளி­நாட்­ட­வர்கள் பற்­றிய தர­வு­களை குடி­வ­ரவுத் குடியகல்வுத் திணைக்­க­ளத்தின் புல­னாய்வு அலகு கண்­ட­றிந்­துள்­ள­தாக, குடி­வ­ரவு குடி­ய­கல்வு திணைக்­க­ளத்தின் கட்­டுப்­பாட்­டாளர் பசன் ரத்­நா­யக்க தெரி­வித்தார்.

 

குறிப்­பாக 1,680 இந்­தி­யர்கள், 936 பாகிஸ்­தா­னி­யர்கள், 683 சீனர்கள், 291 மாலை­தீவு நாட்­ட­வர்கள், 152 பங்­க­ளாதேஷ் நாட்­ட­வர்கள், 42 ஜப்­பா­னி­யர்­களும் இதில் உள்­ள­டங்­கி­யுள்­ளனர்.

மேலும், நெதர்­லாந்தைச் சேர்ந்த 541 பேரும், உக்­ரேனைச் சேர்ந்த 167 பேரும், சவூதி அரே­பி­யாவைச் சேர்ந்த 172 பேரும், ரஷ்­யாவைச் சேர்ந்த 157 பேரும், லெப­னானைச் சேர்ந்த 157 பேரும், நைஜீ­ரி­யாவை சேர்ந்த 130 பேரும், பிரான்சை சேர்ந்த 110 பேரும், பிரித்தானியர்கள் 44 பேரும் விசா காலாவதியான பின்னரும் இலங்கையில் தங்கியுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நன்றி –J AnojanLeave a Reply

Your email address will not be published. Required fields are marked *