தூக்கமின்மை தோன்றியது எப்போது என்று தெரியுமா?


தூக்கமின்மை தோன்றியது எப்போது என்று தெரியுமா? – ஆய்வாளர்கள் சொல்கிறார்கள் தெரிந்து கொள்ளுங்கள்!

‘நீங்கள் எப்போது நிம்மதியாக இருக்கிறீர்கள்?’ என்று கேட்டால் யாராக இருந்தாலும் அவர்களிடம் இருந்து வரும் ஒரே பதில் ‘தூங்கும்போது மட்டும்தான்!’ இந்தத் தூக்கம்தான் வாழ்க்கையில் அனைவருக்கும் இருக்கும் ஒரே சுகம். மூளைக்காக மூளையே ஏற்படுத்திக்கொண்ட ஓய்வுதான் இந்தத் தூக்கம்!

இன்றைய பரபரப்பான, இயந்திரமயமான வாழ்க்கைச் சூழலில் பெரும்பாலானவர்கள் தூக்கமின்றித் தவிக்கிறார்கள்.

அந்தக் காலத்தில் உடல் உழைப்புச் செய்து வந்த மனிதனுக்குத் தூக்கம் தேடி வந்தது. தற்போது மூளை உழைப்பு அதிகமானதால் தூக்கத்தைத் தேட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிட்டது.

இன்றைய காலத்தில். தூக்கமின்மை எப்போது தோன்றியிருக்கலாம்? அதையும் கண்டுபிடித்து விட்டார்கள்! அதாவது, 1879-ம் ஆண்டு தாமஸ் ஆல்வா எடிசன் மின்சார பல்பைக் கண்டுபிடித்த பிறகுதான் தூக்கமின்மை விழித்துக் கொண்டதாக கூறுகின்றனர் ஆய்வாளர்கள்.

அதனால்தான், உறக்கத்தை மின்சார பல்பு கண்டுபிடிப்பதற்கு முன்பு, மின்சார பல்பு கண்டுபிடித்ததற்கு பின்பு என்று பிரிக்கின்றனர்.

இருட்டையே பழகிக்கொண்ட மனிதன் ஆரம்ப காலத்தில் கிட்டத்தட்ட 10 மணிநேரம் தூங்கினான். பல்பு கண்டுபிடித்த பின்பு, தூக்கத்தின் நேரம் படிப்படியாகக் குறைய ஆரம்பித்தது. தொலைக்காட்சி, சினிமா, இன்டர்நெட், மெயில் என்று புதிது புதிதாய் வர 10… 8… 6… என்று குறைந்துபோனதாம் தூக்கம்.

அதாவது, 8 மணிநேரம் தூக்கம்… 8 மணிநேரம் உழைப்பு… 8 மணிநேரம் மற்ற வேலைகள் என்று பிரித்து வைக்கப்பட்டது. இன்றைக்கு அதுவும் குறைந்து வருவது கொஞ்சம் கவலைக்குரிய விஷயம்தான்.

ஒரு மாதக் குழந்தையானது 18 முதல் 22 மணிநேரமும்,
2 முதல் 3 மாதக் குழந்தை
16 முதல் 20 மணிநேரமும்,
3 முதல் 6 மாதக் குழந்தை 15 முதல் 16 மணிநேரமும்

உறங்க வேண்டும். ஆறாவது மாதம் பகல் நேரத் தூக்கம் குறையும். ஆறுமாதம் முதல் 12 மாதம் வரை 14 முதல் 16 மணிநேரம் தூங்கவேண்டும். அதேபோல், ஒரு வயது முதல் 4 வயது வரை 12 முதல் 14 மணிநேரம் வரை தூங்க வேண்டும்.

4 முதல் 6 வயது வரை 10 முதல் 12 மணிநேரம் தூங்குவது நல்லது. 6 முதல் 10 வயது வரை 9 முதல் 10 மணிநேரம் உறங்க வேண்டும்.

16 வயதுக்குமேல் உள்ளவர்கள் ஆறரை முதல் 8 மணிநேரம் வரை தூங்கலாம். நடுத்தர வயது உடையவர்கள் 6 முதல் 8 மணி நேரம் வரை தூங்குவது நல்லது. அதற்குப் பின்னர், வயது ஏற…ஏற… தூக்கத்தின் அளவு குறையும்.

நன்றாகத் தூங்குவது எப்படி?
குறிப்பிட்ட நேரத்தில் தூங்கி, குறிப்பிட்ட நேரத்தில் எழுந்திருக்கப் பழகிக்கொள்ள வேண்டும். அப்படிப் பழக்கமாக்கிக் கொண்டால் தூங்குவதற்குரிய நேரம் வந்தவுடன் உறக்கம் உங்களைக் கட்டியணைக்கும். தூங்கச் செல்வதற்கு ஒன்றரை மணி நேரத்துக்கு முன்பே சாப்பிட்டு விடவும். சாப்பிட்டவுடன் தூங்கினால் நள்ளிரவில் விழிப்பு வரும்.

தினமும் காலையில் உடற்பயிற்சி, யோகா, தியானம் செய்வது நல்லது. மதியம் தூங்கிப் பழகியவர்கள் 20 முதல் 30 நிமிடமே தூங்க வேண்டும். மதியம் அதிக நேரம் தூங்கினால் இரவில் தூக்கம் பாதிக்கும்.

தூங்குவதற்கு முன்பு மனதை அமைதியாக்கித் தயார்படுத்திக் கொள்ளவும். படுக்கையறை காற்றோட்டமாகவும், சத்தமில்லாத அமைதியாகவும் வைத்துக்கொள்ள வேண்டும்.

படுக்கையறை இருட்டாகவும், வெளியில் உள்ள வெளிச்சம் உள்ளே வராத வகையிலும் இருத்தல் வேண்டும். படுக்கையறை குளிராக இருப்பது அவசியம். அறையில் உள்ள மின்விசிறியில் அதிக ஸ்பீடு வேண்டாம். மிதமான காற்றினால் சீரான தூக்கம் வரும்.

மல்லாந்து தூங்கும் பழக்கம் உள்ளவர்கள் தலையணை பயன்படுத்த வேண்டாம். உறக்கம் வராவிட்டால் தூக்கத்தை வரவழைக்கும் புத்தகம் படித்தல் போன்ற வேலைகளைச் செய்யலாம்.

ஒருநாள் சரியாகத் தூக்கமில்லாமல் இருந்தால் அதற்காகக் கவலைப்பட வேண்டாம். அதை நமது உடல் ஆட்டோமேட்டிக்காக என்று கொள்ளும்.

ஆனால், அதையே தொடர்ந்தால்தான் பிரச்சனை. படுக்கையில் தூக்கம், செக்ஸ் இரண்டை மட்டுமே வைத்துக்கொள்ள வேண்டும். படுக்கையில் உட்கார்ந்து டிவி, கம்பியூட்டர், லேப்டாப் பார்ப்பது, புத்தகம் படிப்பது போன்றவைகள் கூடவே கூடாது.

நன்றி – ஆர்.ஈ.சந்திரசேகர்

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *