சரியாக தூங்காவிட்டால் இந்த பிரச்சனைகள் வரும்!


தூக்கத்தின் அவசியத்தினை உணர்ந்து, இரவு வெகு நேரம் விழித்து டி.வி. பார்த்தல், போன் பேசுதல், செல்போனில் மூழ்குதல் இவற்றினைத் தவிர்த்து 7-8 மணி நேரமாவது அன்றாடம் தூங்க வேண்டும்.

இரவில் தூங்காவிட்டால் ஏற்படும் பாதிப்புகள் :

தூக்கம் நமக்கு கிடைத்த ஆசிர்வாதம். தூங்கும் பொழுதுதான் நம் உடலில் ரிப்பேர்கள்(சரி செய்தல்) நடக்கின்றன மற்றும் வளர்ச்சி ஏற்படுகின்றது. சக்திகள் சேமிக்கப்படுகிறது. ஊட்டச் சத்துகள் உடலுக்கு அளிக்கப்படுகின்றன.

தூக்கத்தில் தான் ஹார்மோன்கள் சீர் செய்யப்படுகின்றது.

நோய் எதிர்ப்புச் சக்தி கூடுதலாக இருக்கும்.

ஞாபக சக்தி கூடும். தூக்கமின்மை ஒருவரை பித்து பிடித்தவர் போல் ஆக்கி விடுகின்றன.

தூக்கமின்மை :

✔ மறதி நோயினை ஏற்படுத்தும். கவனிக்கும் திறன் வெகுவாய் குறையும்.

✔ தூக்கமின்மை அதிக எடையினைக் கூட்டுகின்றன.

✔ சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்படும்.

✔ இருதய சம்பந்தமான நோய்கள் ஏற்படும்.

✔ மனநிலை பாதிக்கப்படுவார்கள்.

✔ ப்ரஸ்சர் மற்றும் புற்று நோய் பாதிப்புகள் ஆண்களுக்கு கூடும்.

தூக்கத்தின் அவசியத்தினை உணர்ந்து இரவு வெகு நேரம் விழித்து இருக்காமல் அன்றாடம் தூங்க வேண்டும்.

‘நல்ல சிரிப்பும் ஆழ்ந்த உறக்கமுமே ஆரோக்கிய வாழ்க்கைக்கான அடிப்படை மருந்துகள்”…..

நன்றி  – Nithra Edu SolutionsLeave a Reply

Your email address will not be published. Required fields are marked *