இலங்கையின் உலகக்கிண்ண கனவு கலைந்து போனது!


இரண்டு கோடி மக்களின் ஆசைகளை சுமந்தவாறு உலகக்கிண்ண தொடரில் பங்கேற்ற இலங்கை அணி, ஏமாற்றத்துடன் உலகக்கிண்ண தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.

புதிய அணித்தலைமை, பெரும்பாலான அனுபமில்லாத வீரர்கள் என்ற கலவையுடன் உலகக்கிண்ண தொடரில் பங்கேற்க இங்கிலாந்து மண்னை தொட்ட இலங்கை அணி, ஆரம்ப பயிற்சி போட்டியிலேயே சொதப்பியது.

தென்னாபிரிக்கா அணியுடனான பயிற்சி போட்டியில் தோற்றாலும், நம்பிக்கையை கைவிடாது தனது முதல் லீக் போட்டியில் நியூஸிலாந்து அணியை எதிர்கொண்ட இலங்கை அணி, 10 விக்கெட்டுகளால் படுதோல்வியை சந்தித்தது.

ஆனால் அந்த எதிர்பார்ப்புக்களை தவிடுபொடியாக்கிய தென்னாபிரிக்கா அணி, 9 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்று, இலங்கை அணியின் அரைறுதிக்கான வாய்ப்புக்கு தடைப் போட்டது.

அவுஸ்ரேலியா அணி ஏற்கனவே அரையிறுதிக்கு முன்னேறிவிட்டது. அடுத்தபடியாக இந்தியா மற்றும் நியூஸிலாந்து 11 புள்ளிகளுடன் அரையிறுதிக்கான வாய்ப்பின் விளிம்பில் நிற்கின்றன.

ஆகவே அரையிறுதிக்கு முன்னேறும் நான்காவது அணிக்கான போட்டியில், இங்கிலாந்து, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகள் இருந்தன.

இலங்கை அணி, 1999ஆம் ஆண்டுக்கு பின்னர், உலகக் கிண்ண தொடரில் வெளியேற்று சுற்றுக்கு தகுதிபெறாமல் வெளியேறும் முதல் சந்தரப்பம் இதுவாகும்.

உலகக்கிண்ண வரலாற்றை பொறுத்தவரை இலங்கை அணி, 1975ஆம் ஆண்டு முதல் 1992ஆம் ஆண்டு வரை குழு நிலைப் போட்டிகளுடன் வெளியேறியுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணி, 1996ஆம் ஆண்டு அர்ஜூன ரணதுங்க தலைமையில், முதல் முறையாக உலகக்கிண்ணத்தை ஏந்தியது. 1999ஆம் ஆண்டு குழு நிலைப் போட்டிகளுடன் வெளியேறியது.

2003ஆம் ஆண்டு அரையிறுதிப் போட்டிவரை முன்னேறிய இலங்கை அணி, 2007ஆம் ஆண்டும் 2011ஆம் ஆண்டுகளில் இரண்டாவது இடத்தை பிடித்துக் கொண்டது. 2015ஆம் ஆண்டு காலிறுதிப் போட்டிவரை முன்னேறியது.

நன்றி -AnojkiyanLeave a Reply

Your email address will not be published. Required fields are marked *