7 விக்கெட்டுகளால் இலங்கையை வீழ்த்திய இந்தியா!


உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இடம்பெற்ற 44-வது லீக் ஆட்டத்தில் இந்தியா அணியை இலங்கை அணி எதிர்கொண்டது.

இந்நிலையில் 50 ஓவர்கள் நிறைவில் மேத்யூசின் அதிரடி சதத்தால் இந்திய அணிக்கு 265 ஓட்டங்களை இலக்காக நிர்ணயித்தது.

இந்திய அணி தரப்பில் பும்ரா 3 விக்கெட், புவனேஸ்வர் குமார், பாண்டியா, குல்தீப் யாதவ், ஜடேஜா ஆகியோர் தலா 1 விக்கெட்டும் விழ்த்தினர்.

இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா , கேஎல் ராகுல் முதல் விக்கெட்டுக்கு 189 ஓட்டங்களை சேர்த்தனர்.

இந்நிலையில் 103 ஓட்டங்களை பெற்ற நிலையில் அவர் வெளியேறினார்.

இதையடுத்து ராகுல் 111, ரிஷப் பந்த் 4 என வெளியேறினர். இதனையடுத்து விராட் கோலி, பாண்டியா அதிரடியாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச்சென்றனர்.

இந்நிலையில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.

இலங்கை அணி தரப்பில் மலிங்க, ரஜித, உதன ஆகியோர் தலா 1 விக்கெட்டை விழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நன்றி-iccLeave a Reply

Your email address will not be published. Required fields are marked *