தகவல் திருட்டை தவிர்க்க தெரிந்து கொள்ள வேண்டியவை!


தகவல் திருட்டை தவிர்க்க ஸ்மார்ட்போன் பயனர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை! – எச்சரிக்கை ரிப்போர்ட்

நம் நாட்டைச் சேர்ந்தவர்கள் 10 முதல் 210 வரை எண்ணிக்கையிலான செயலிகளை தங்கள் ஸ்மார்ட்போன்களில் இன்ஸ்டால் செய்துகொள்கிறார்கள் என்றும், ஆனாலும் இதில் அதிகபட்சமாக 24 செயலிகளை மட்டுமே பயன்படுத்துகின்றனர் என்றும், டெக்ஏஆர்சி என்ற தொழில்நுட்ப ஆலோசனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.

இந்த ஆய்வானது, என்ன பயன்பாட்டுக்கு என்று தெரிந்துகொள்ளாமல் பல செயலிகள் இன்ஸ்டால் செய்கிறார்கள்.

இதன் காரணமாக போன்களின் செயல்திறனை பாதிப்படைவதோடு, பயனர்களின் தகவல்கள் ஆபத்தானவர்களிடம் போய்ச் சேரவும் வழிவகுக்கிறது என்றும் எச்சரிக்கிறது.

அதாவது நம் நாட்டில் 75 சதவிகித பயனர்கள் சமூக ஊடக செயலிகளையும், 65 சதவிகிதத்தினர் கேம்ஸ் என்னும் விளையாட்டு செயலிகளையும், 50 சதவிகிதத்தினர் பணப் பரிவர்த்தனைக்கான செயலிகளையும், 40 சதவிகிதத்தினர் தொலைக்காட்சி, ஒளிக்கோவை போன்ற டி.வி. மற்றும் வீடியோ செயலிகளையும் பயன்படுத்துகின்றனர்.

இவர்க்ளின் தகவல்கள் செயலிகள் மூலம் விளம்பர மற்றும் வியாபார நிறுவனங்களுக்கு விற்கப்படுகிறது அல்லது பகிர்ந்துகொள்ளப்படுகிறது என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கின்றது.

எனவே எந்தவொரு செயலிகளை இன்ஸ்டால் செய்யும் முன்னர், இது கண்டிப்பாக நமக்கும் தேவையா என்று யோசித்துப் பார்த்து இஸ்டால் செய்வதும், தேவை இல்லாதனவற்றை தவிர்ப்பதும் நல்லது.

நன்றி – ஆனந்தகுமார்Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *