சோமாலியாவில் தற்கொலை தாக்குதல் – 26 பேர் பலி!


கிழக்கு ஆப்ரிக்க நாடான, சோமாலியாவில் அல்ஷபாப் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதலில், 26 பேர் உயிரிழந்துள்ளனர். அத்தோடு, 56 பேர் காயமடைந்துள்ளனர்.

தெற்கு சோமாலியாவின் கிஸ்மேயோ என்ற இடத்தில் உள்ள அசாசே என்ற ஹோட்டலின் நுழைவு பகுதியில் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) இரவு அல்ஷபாப் பயங்கரவாதிகளால் தாக்குதல் நடத்தப்பட்டது.

அதன் பின்னர், பயங்கரவாதிகள் சிலர், ஆயுதங்களுடன் ஹோட்டலுக்குள் நுழைந்து, விருந்தினர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

இதனையடுத்து பாதுகாப்பு படையினர், ஹோட்டலை சுற்றி வளைத்தனர். இரு தரப்புக்கும் இடையில் சுமார் 14 மணி நேரம் நடந்த துப்பாக்கிச்சூட்டு சமர், நேற்று இரவு முடிவுக்கு வந்தது.

இந்நிலையில் ஹோட்டலில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் அனைவரும், சுட்டுக்கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், சோமாலிய பத்திரிகையாளர் ஹடான் நலாயே என்பவர் உட்பட, 26 பேர் உயிரிழந்துள்ளனர். அத்தோடு 56 பேர் காயம் அடைந்தனர்.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *