பெயரின் முதலெழுத்தைக் கொண்டு உங்கள் குணத்தை அறியலாம்!


 

ஆங்கிலத்தில் நம் பெயரின் முதல் எழுத்தைக் கொண்டு குணநலன்களை கணிக்கும் ஒரு வகை ஜோதிடம் உண்டு. அதன்படி உங்கள் பெயர் ஆரம்பிக்கும் எழுத்தின்படி உங்கள் குணம் எப்படி என்று பார்ப்போம்…

A

A எனும் எழுத்தில் பெயர் தொடங்கினால் அவர்கள் எதிலும் அதிக ஈடுபாடு கொண்டவராக இருப்பர். இவர்களின் உடல் அமைப்பு மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும். இவர்கள் எதிலும் உறுதியாக இருப்பதோடு பிறரை வழிநடத்திச் செல்வர். மற்றவரின் உதவியை எதிர்பாராது சொந்தக்காலில் நிற்க முயற்சி செய்வார்கள்.

B

B எனும் எழுத்தில் பெயர் தொடங்கினால் அவர்கள் தன் மீது மற்றவர்கள் செலுத்தும் அன்பிற்கு அதிகம் மதிப்பளிப்பர். அத்தோடு பிறர் மீதும் அதிக அன்பு செலுத்துவர். இவர்கள் தைரியசாலியாக இருந்தாலும் அன்பு மிகுதியாக இருக்கும் காரணத்தால் பல நேரங்களில் உணர்ச்சிவசப்படுவர்.

C

C எனும் எழுத்தில் பெயர் தொடங்கினால் அவர்கள் மிக சிறந்த பேச்சாளராக இருக்க வாய்ப்பதிகமாக உள்ளது. வாயை வைத்து பிளைத்துக் கொள்ளும் ஆற்றல் இவர்களிடம் உண்டு. இவர்களின் குறை என்வென்றால் அதிக செலவாளியாக இருப்பர்.

D

D எனும் எழுத்தில் பெயர் தொடங்குபவர்களிடம் ஆளுமை திறன் அதிகம் இருக்கும். வணிகம் செய்வதில் வல்லவர்களாக இருப்பார்கள். நம்பிக்கை மிக்கவர்களாகவும் பிறருக்கு எப்போதும் உதவும் குணம் கொண்டவர்களாகவும் இருப்பர்.

E

E எனும் எழுத்தில் பெயர் தொடங்குபவர்கள் மென்மையான குணம் கொண்டவர்களாக இருப்பர். நண்பர்களை எளிதில் பெறும் குணம் கொண்ட இவர்கள் பிறரிடம் தொடர்பு கொள்வதில் சிறந்தவர்களாக இருப்பர்.

F

எனும் எழுத்தில் பெயர் தொடங்கினால் அவர்கள் தன்னைச் சுற்றி உள்ளவர்களை முடிந்த வரை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளும் திறன் கொண்டவர்களாக இருப்பர். திட்டமிடுவதில் சிறந்தவர்களாக விளங்கும் இவர்கள் பிறரின் நம்பிக்கைக்கு பாத்திரமாக விளங்குவர்.

G

எனும் எழுத்தில் பெயர் தொடங்கினால் அவர்கள் வரலாற்றில் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பர். தன் விடயங்களில் மற்றவர்கள் மூக்கை நுழைப்பதை இவர்கள் எப்போதும் விரும்புவதில்லை. பயணம் செய்வதில் ஆர்வம் உள்ளவர்கள். மதப்பற்று அதிகமுள்ளவர்க்கள்.

H

H எனும் எழுத்தில் பெயர் தொடங்கினால் அவர்கள் பிறரை ஊக்குவிப்பதில் சிறந்தவர்களாக இருப்பர். இவர்களிடம் மற்றவரை சிறப்பாக கட்டுப்படுத்தும் தன்மை இருப்பதோடு இவர்களின் பேச்சு மற்றவரை ஊக்குவிக்கும் வகையில் இருக்கும்.

I

எனும் எழுத்தில் பெயர் தொடங்கினால் அவர்கள் அழகு சம்பந்தப்பட்ட வேலைகளை மிகச்சிறப்பாக செய்வர். பியூட்டி பார்லர், பாஷன் டிசைனிங் போன்றவற்றில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். அனைத்தையும் தைரியமாக எதிர்கொள்ளும் தன்மை கொண்டவர்கள்.

J

J எனும் எழுத்தில் பெயர் தொடங்கினால் அவர்கள் விடாமுயற்சியோடு செயற்படுவர். ஒன்றை அடைய நினைதால் அதற்கான பல முயற்சிகளை மேற்கொள்வர். தன் வாழ்க்கைத் துணையை பெரும்பாலும் இவர்களே தேர்ந்தெடுப்பர்.

K

K எனும் எழுத்தில் பெயர் தொடங்குபவர்கள் வாழ்வில் அர்த்தமுள்ள செயல்களை செய்ய எண்ணுவர். எதையும் பேச வெட்கப்படும் இவர்கள் தனக்கு பிடித்தவரை அன்போடு கவனித்துக்கொள்வர். உடலளவில் திடமானவர்களாக இருந்தாலும் எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவராக இருப்பர்.

L

L  எனும் எழுத்தில் பெயர் தொடங்கினால் அவர்கள் தன் அன்பை சரியான நபரிடம் வெளிப்படுத்துவதில் தயக்கம் கொள்வர். இதனால் அன்பு சம்பந்தப்பட்ட விடயத்தில் பிரச்சினை வரலாம். வாழ்க்கையில் எப்படியாவது முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இவர்களிடம் உண்டு.

M

எனும் எழுத்தில் பெயர் தொடங்குபவர்கள் மற்றவர்களுக்கு சிறந்த அறிவுரைகள் வழங்குவதில் வல்லவர்கள். இவர்களுக்கு மிகச்சிறந்த நண்பர்கள் கிடைப்பார்கள். அதோடு இவர்களின் வாழ்க்கைத் துணையும் இவர்களிடம் உண்மையாக இருப்பர்.

N

N எனும் எழுத்தில் பெயர் தொடங்கினால் அவர்கள் எந்தவொரு செயலையும் முழுமையாக செய்ய வேண்டும் என்று எண்ணுபவர்களாக இருப்பர். எதிலும் விடாமுயற்சியோடும் துடிப்போடும் செயற்படுவர்.

O

O எனும் எழுத்தில் பெயர் தொடங்கினால் அவர்கள் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருப்பர். இதனால் பேராசிரியர், எழுத்தாளர், ஆசிரியர் போன்ற பணிகள் இவர்களுக்கு உகந்ததாக இருக்கும். அனைவரிடமும் ஒழுக்கத்தை எதிர்பார்ப்பார்கள்.

P

P எனும் எழுத்தில் பெயர் தொடங்குபவர்கள் படபடவென பேசினாலும் அறிவுக்கூர்மையுடன் செயற்படுவார்கள். மற்றவர்களிடம் எப்படி பழக வேண்டும் என்பதை நன்கு அறிந்து வைத்திருப்பார்கள்.

Q

எனும் எழுத்தில் பெயர் தொடங்கினால் அவர்கள் சிறந்த பேச்சாளராகவும் எழுத்தாளராகவும் இருப்பர். இவர்கள் பத்திரிகை துறையில் ஜொலிக்கவும் வாய்ப்புள்ளது.

R

R எனும் எழுத்தில் பெயர் தொடங்குபவர்கள் அன்பையும் கருணையையும் வாரி வழங்கும் மிகச்சிறந்த மனிதராக இருப்பர். சவால்களை எதிர்கொள்ளும் திறன் கொண்டவர்கள்.

S

S  எனும் எழுத்தில் பெயர் தொடங்கினால் அவர்கள் புதிய யுக்திகளை கையாண்டு எதிலும் வெற்றி பெறுவர். எப்போதும் மற்றவர்களின் கவனம் தன் மீது இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள்.

T

T எனும் எழுத்தில் பெயர் கொண்டவர்கள் எதையும் எதிர் கொள்ளும் மனவலிமை கொண்டவர்களாக இருப்பர். எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் இவர்கள் வாழ்வில் எளிதில் முன்னேறுவார்கள்.

U

U எனும் எழுத்தில் பெயர் தொடங்கினால் அவர்கள் அறிவுபூர்வமான விடயங்கள் தொடர்பில் எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பர். பத்திரிகை, ஓவியம், எழுத்து சம்பந்தப்பட்ட துறையில் இருந்தால் இவர்கள் எளிதாக முன்னேறுவார்கள்.

V

V எனும் எழுத்தில் பெயர் தொடங்கினால் அவர்கள் நடைமுறைக்கு ஏற்றவாறு வாழும் தன்மை கொண்டவர்களாக இருப்பர். இவர்கள் அனைவரிடமும் அன்புடன் பழகுவதுடன் மென்மையான குணம் கொண்டவராக இருப்பர்.

W

W எனும் எழுத்தில் பெயர் தொடங்கினால் அவர்கள் ஒரு புரியாத புதிராக இருப்பர். ஆனாலும் இவர்களிடம் அன்பிற்கு பஞ்சம் இருக்காது. அனைவருடனும் பாசமாக பழகுவர்.

X

எனும் எழுத்தில் பெயர் தொடங்கினால் அவர்கள் மற்றவருடன் எளிதாக பழகக்கூடியவர். ஆடம்பரப் பிரியராக இருப்பர். ஆடம்பரமாக வாழ வேண்டும் என நினைப்பர்.

Y

எனும் எழுத்தில் பெயர் தொடங்கினால் அவர்கள்  தைரியம் மிக்கவர்களாக இருப்பர். இக்கட்டான சூழ்நிலையில் துணிச்சலாக முடிவெடுப்பதில் இவர்கள் வல்லவர்கள்.

Z

Z எனும் எழுத்தில் பெயர் தொடங்கினால் அவர்கள் மற்றவர்களை எளிதில் புரிந்து கொள்ளும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். எங்கு சென்றாலும் இவர்களுக்கு என்றொரு கூட்டம் எப்போதும் இருக்கும்.

 

நன்றி : ஒரு துளி இணையம்

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *