தெற்கு லண்டனில் கத்திக்குத்துத் தாக்குதலில் இளைஞர் பலி!


தெற்கு லண்டனில் நேற்று இடம்பெற்ற கத்திக்குத்துத் தாக்குதலில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததுடன் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தெற்கு லண்டன் க்ரொய்டன் (Croydon) பகுதியில் உள்ள பிரைட்டன் வீதிக்கு நேற்று இரவு 9 மணியளவில் பொலிஸார், லண்டன் அம்புலன்ஸ் மற்றும் வான்வழி அம்புலன்ஸ் பிரிவினர் அழைக்கப்பட்டனர்.

மற்றைய இரு இளைஞர்களும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களில் ஒருவர் தாக்குதலை நடத்திய சந்தேகத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *