மைத்திரிபால சிறிசேன கொலையின் பின்னணியில் இந்திய உளவுத்துறையும் இல்லை!


 

தன்னை கொலை செய்ய​ எந்தவொரு இந்திய உளவுத்துறையும் திட்டம் தீட்டியதாக ஜனாதிபதி கருத்து தெரிவிக்கவில்லை என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது இந்தியாவின் ´ரோ´ உளவுத்துறை நிறுவனம் தன்னை கொலை செய்ய முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்ததாக இந்தியாவின் ´த ஹிந்து´ பத்திரிகை இன்று செய்தி வெளியிட்டிருந்தது.

இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *