தென்­னா­பி­ரிக்க அணியை மோதும் இலங்­கை அணியில் யார் யார்!


 

தென்­னா­பி­ரிக்க அணி இலங்­கைக்கு சுற்றுப் பயணம் மேற்­கொண்­டுள்ளது இலங்­கை­யுடன் இரண்டு டெஸ்ட் போட்­டிகள், ஐந்து ஒருநாள் போட்­டிகள் மற்றும் ஒரே ஒரு இரு­ப­துக்கு 20 போட்­டி கொண்ட தொடரில் விளை­யா­டு­கின்­றது.

தென்­னா­பி­ரிக்க இலங்­கை தொடரின் முத­லா­வது டெஸ்ட் போட்டி எதிர்­வரும் 12ஆம் திகதி காலி சர்­வ­தேச மைதா­னத்தில் ஆரம்­ப­மா­க­வுள்­ளது. இரண்டாவது டெஸ்ட் கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் எதிர்வரும் 20ஆம் திகதி ஆரம்பமாகின்றது.

இந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

தினேஷ் சந்­திமால் (அணித் தலைவர்), அஞ்­சலோ மெத்­தியூஸ், திமுத் கரு­ணா­ரத்ன, குசல் மெண்டிஸ், குசல் ஜனித் பெரேரா, தனுஷ்க குண­தி­லக, தனஞ்­சய டி சில்வா, ரோஷேன் சில்வா, நிரோஷன் திக்­வெல்ல, ரங்­கன ஹேரத், சுரங்க லக்மால் (உப தலைவர்), தில்­ருவன் பெரேரா, அகில தனஞ்­சய, லஹிரு குமார, சந்­தகான் மற்றும் கசுன் ராஜித ஆகியோர் அணியில் இடம்­பெற்­றுள்­ளனர்.

இதில் குசல் ஜனித் பெரேரா மற்றும் ரங்­கன ஹேரத் ஆகிய இரு­வரும் உடற்­த­குதி பெற்றால் மட்­டுமே போட்­டி­யிலும் விளை­யா­டுவர் என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *