Srilanka VS India T -20 போட்டி ஆரம்பம்…..


இலங்கை – இந்திய அணிகளுக்கிடையிலான சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் நாளை (05) ஆரம்பமாகின்றது.

3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் முதல் போட்டி குவாட்டியில் நாளை நடைபெறவுள்ளது.ஏனைய இரு போட்டிகளும் January 7 Indoreமற்றும் January 9 Puneயிலும் இடம்பெறவுள்ளது.

இப்போட்டிகள் இலங்கை நேரப்படி இரவு 7 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.

இது 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு பின்னர் இலங்கையும் இந்தியாவும் மோதவுள்ள முதல் சர்வதேச இருபதுக்கு 20 போட்டியாகும்.

இலங்கை – இந்திய அணிகள் இதுவரை 16 சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடியுள்ளன. அவற்றில் 11 போட்டிகளில் இந்தியாவும் 5 போட்டிகளில் இலங்கையும் வெற்றி பெற்றுள்ளன.

 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *